குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்வு!
அகமதாபாத்: குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காந்திநகரில் இன்று நடைபெற்ற பா.ஜ.க.எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பூபேந்திர பட்டேல், புதிய முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குஜராத் மாநில முதல்வராக கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி இருந்தார். இவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த பதவிக்கு 2014 இல் ஆனந்திபென் படேல் தேர்வானார்.
இதையடுத்து பட்டேதார் சாதிக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் ஆனந்தி பென் ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து 2016 ஆம் ஆண்டு விஜய் ரூபாய் தேர்வானார். இதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்றது.

பாஜக வெற்றி
இதில் பாஜக வென்றதை அடுத்து விஜய் ரூபானியே முதல்வராக தொடர்ந்தார். இவர் பிரதமருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நெருக்கமானவர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஜய் ரூபானி நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

வளர்ச்சி பயணம்
இதுகுறித்து அவர் கூறுகையில் குஜராத்தின் வளர்ச்சி பயணம் புதிய ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் புதிய தலைமையின் கீழ் முன்னோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்துக் கொண்டுதான் எனது பதவியை ராஜினாமா செய்தேன். கட்சியில் பணி செய்துக் கொண்டிருந்த எனக்கு இத்தனை பெரிய முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டதை எண்ணி மகிழ்கிறேன்.

மோடியின் வழிகாட்டுதல்
பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி இந்த 5 ஆண்டுகளில் குஜராத் புதிய வளர்ச்சியை தொட்டுள்ளது. எனக்கு வாய்ப்பளித்த பிரதமருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இதுவரை கடந்த 5 மாதங்களில் பாஜக ஆட்சியிலிருக்கும் 4 மாநில முதல்வர்களை மாற்றியுள்ளது. கர்நாடகாவில் பிஎஸ் எடியூரப்பா மாற்றப்பட்டு பசவராஜ் பொம்மை முதல்வராகவுள்ளார்.

முதல்வராக்கப்பட்ட இருவர்
அதற்கு அடுத்து அஸ்ஸாம முதல்வராக இருந்த சர்பானந்த சோனேவால் மாற்றப்பட்டு ஹிமாந்த் பிஸ்வா சர்மா முதல்வராக்கப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் தீரத் சிங் ராவத், திரிவேந்திர சிங் ராவத் என இரு முதல்வர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு தற்போது புஷ்கர் சிங் தாமி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

முதல்வராக இருந்தவர் ராஜினாமா
இந்த நிலையில் குஜராத் மாநிலத்திலும் முதல்வராக இருந்த விஜய் ரூபானி ராஜினாமா செய்ததால் அடுத்த முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டது. அதன்படி இன்று குஜராத்தின் புதிய முதல்வரைத் தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. குஜராத் மாநில துணை முதல்வராக உள்ள நிதின் படேல், முன்னாள் குஜராத் அமைச்சர் கோர்தன் ஸடாஃபியா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் நிர்வாக அதிகாரி பிரஃபுல் கே படேல் ஆகியோரில் யாராவது ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனச் செய்திகள் வெளியானது.
Recommended Video

அடுத்த முதல்வர் யார்
மதியம் 2 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுகிறார். இந்த ரேஸில் குஜராத் மாநில துணை முதல்வராக உள்ள நிதின் படேல், முன்னாள் குஜராத் அமைச்சர் கோர்தன் ஸடாஃபியா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் நிர்வாக அதிகாரி பிரஃபுல் கே படேல் ஆகியோர் உள்ளனர். புதிய முதல்வரை தேர்வு செய்ய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா மற்றும் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் நேற்றைய தினமே காந்தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் முகாமிட்டுள்ளார்கள். அது போல் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் ஜோஷி ஆகியோரும் இன்றைய தினம் அகமதாபாத் செல்கிறார்கள்.

புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்வு
புதிய முதல்வரைத் தேர்வு செய்ய இன்று மதியம் குஜராத் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதியம் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த 2017 குஜராத் சட்டசபைத் தேர்தலில் காட்லோடியா தொகுதியில் (Ghatlodia) போட்டியிட்டு வென்றனர். கடந்த காலங்களில் அகமதாபாத் மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திலும் முக்கிய பதவியிலிருந்தவர்
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ்












Click it and Unblock the Notifications