For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோ அமைதி பேச்சுவார்த்தை.. மெகபூபாவின் அழைப்பை நிராகரித்த பிரிவினைவாதிகள்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் மெகபூபா, பிரிவினைவாதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை பிரிவினைவாதிகள் நிராகரித்துள்ளனர்.

புர்கன் வானி கொல்லப்பட்டதற்கு பின்னர் காஷ்மீரில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சியை சேர்ந்த நாடா'ளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு இன்று காஷ்மீர் சென்றுள்ளது.

Separatists reject Mehbooba Mufti's offer for talks

இதனையடுத்து, "நமது மாநில பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் குழுவுடன் நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பிரிவினைவாதிகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும். நாம் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் என்ற சிந்தனையில் ஒன்று படுவோம். எனவே, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்" என்று மெகபூபா பிரிவினைவாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதலமைச்சர் மெகபூபாவின் இந்த அழைப்பை பிரிவினைவாதிகள் நிராகரித்து கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் அவர்கள் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். சோபியானில் உள்ள மினி தலைமை செயலகத்திற்கும், துணை கமிஷ்னர் அலுவலகத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனையடுத்து அங்கு போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மாநில முதலமைச்சர் மெகபூபா மற்றும் மாநில அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று விரிவான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
Separatists rejected Mehbooba Mufti's offer to talk in all party delegation meeting in Srinagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X