பாஜக பெண் எம்பி நில அபகரிப்பு புகாருக்கு பதிலடி! மன்னர் ஷாஜஹான் பரம்பரை அவிழ்த்துவிட்ட "அந்தரங்கம்"
ஜெய்ப்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹால் இருக்கும் இடம் எங்கள் நிலம்; 400 ஆண்டுகளுக்கு முன்னர் முகாலய மன்னர் ஷாஜஹான் எங்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டார் என்று ஜெய்ப்பூர் இளவரசியும் பாஜக எம்.பி.யுமான தியா குமாரி தெரிவித்த புகார் இப்போது வேறு புதிய பஞ்சாயத்துகளை கிளப்பி விட்டிருக்கிறது.
தாஜ்மஹால், ஷாஜஹான் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டியல் காதல் மாளிகை. சுமார் 22 ஆண்டுகள், 22,000 தொழிலாளர்கள் உழைப்பின் உருவான பளிங்கு மாளிகை. அதனால்தான் இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் தாஜ்மஹாலை கண்டு ரசிக்க உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர்.

தாஜ்மஹால் வழக்கு
ஆனால் தாஜ்மஹால் குறித்து வலதுசாரி இந்துத்துவா சக்திகள் இடைவிடாமல் சர்ச்சையை கிளப்புவது வழக்கம். தாஜ்மஹால் கட்டப்பட்டதே ஒரு சிவன் கோவில் மீது என்பதுதான் வழக்கமான பிரசாரம். அண்மையில் இது தொடர்பாக ஒரு வழக்கையும் போட்டனர். அதில் தாஜ்மஹாலில் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இந்து கடவுள் சிலைகள் இருக்கின்றன. அதனை திறக்க உத்தரவிட வேண்டும் என்பதுதான் வழக்கு. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மனுதாரரை வெளுவெளுவென வெளுத்துவிட்டது.

ஷாஜஹான் நில அபகரிப்பு
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்தவர் ஜெய்ப்பூர் இளவரசி என அழைத்துக் கொள்ளும் பாஜக எம்.பி. தியா குமாரி. இது தொடர்பாக தியாகுமாரி கூறுகையில், எங்கள் மூதாதையர் நிலத்தை ஷாஜஹான் ஆக்கிரமித்துக் கொண்டார். அந்த நிலத்தில்தான் தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து வருகிறோம் என கூறி பெரும் பரபரபபி ஏற்படுத்தினார்.
|
முகாலயர் பரம்பரை பதிலடி
ஆனால் இப்போது இந்த நில அபகரிப்பு புகார் போகும் திசையே வேறாகிவிட்டது. பாஜக பெண் எம்.பி. தியாகுமாரி, முகாலய அரசர் பரம்பரையை சேர்ந்த இளவரசர் HrH Prince Yakub Habeebuddin Tucy என்பவர் ஒரு வீடியோவை தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: தியாகுமாரியின் உடம்பில் ஓடுவது ராஜபுத்திரர்களின் ரத்தம் என்றால் ஷாஜஹான் மீது நில அபகரிப்பு சொன்ன ஆவணங்களை வெளியிட வேண்டும். இப்படி எல்லாம் பேசுவது படு முட்டாள்தனமானது.

ராஜபுத்திர பாட்டிகள்
மன்னர் ஷாஜஹானின் தாத்தா அக்பரின் மனைவியரில் ஒருவர் ஜோதா பாய் என்ற ஹர்கா பாய், ராஜபுத்திரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஷாஜஹானின் 2-வது மனைவி பெயர் லால் பாய். அதாவது ராஜ்புத்திர குடும்பத்து மருமகன்தான் ஷாஜஹான். மருமகன் என்ற வகையில் ராஜபுத்திர குடும்பத்தினர் சீர்வரிசை அல்லது சீதனங்கள் கொடுத்திருக்கக் கூடும். அதையெல்லாம் நில அபகரிப்பு என்றெல்லாம் சொல்லக் கூடாது. மாமன்னர் அக்பர் காலத்தில் இருந்தே முகாலயர்களுடன் ராஜபுத்திரர்கள் கூட்டணி அமைத்து போரிட்டுள்ளனர். இவ்வளவு ஏன் என்னுடைய 27 பாட்டிகளில் 14 பேர் ராஜபுத்திரர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவ்வாறு HrH Prince Yakub Habeebuddin Tucy கூறினார்.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications