கணவனுக்கு கடன் கொடுத்தவருடன் கள்ளக்காதல்.. ரஞ்சிதா போட்ட பக்கா ஸ்கெட்ச், கொத்தாக மாட்ட வைத்த சம்பவம்
பெங்களூரு: பெங்களூருவில் ஹோட்டல் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலையின் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சன்னப்பட்டினத்தைச் சேர்ந்தவர அருண்குமார் (வயது 34). இவரது மனைவி ரஞ்சிதா (வயது 23). இவர்கள் சன்னசந்திராவில் வசித்து வந்துள்ளார்கள். இந்நிலையில் அருண்குமார் கடந்த ஜூன் 29-ம் தேதி தெற்கு பெங்களூரில் உள்ள காட்டிகெரேபாளையாவில் உள்ள நைஸ் சாலை அருகே சடலமாக கிடந்தார். இது தொடர்பாக தகவலின் பேரில் தலகட்டபுரா போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். மறுநாள் சடலம் யாருடையது என்பதை அடையாளம் கண்டனர்.

அவரது மனைவி ரஞ்சிதாவை பிடித்து விசாரித்த போது முண்ணுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து தீவிரமாக விசாரித்த போது, கள்ளக்காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரஞ்சிதா மற்றும் அவரது கள்ளக்காதலன், கணேஷின் நண்பர்கள் சிவானந்தா, சரத் மற்றும் தீபக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், அருண்குமார் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட நிலையில் ரஞ்சிதாவின் நடத்தையில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்த அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது தான் எங்களுக்கு உண்மைகள் தெரியவந்தது.
கள்ளக்காதலன் கணேஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய சதி செய்ததை ஒப்புக்கொண்டார்.
ரஞ்சிதாவின் கணவர் அருண்குமார் தனது ஹோட்டல் தொழிலுக்காக கணேஷிடம் இருந்து சுமார் ரூ.8 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அவர் பெரிய அளவில் நஷ்டம் அடைந்திருந்தார். அருண்குமார் ர் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ஹோட்டலை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனிடையே கடன் கேட்டு அடிக்கடி சென்று ரஞ்சிதாவிடம் பேசிய போது, கணேசுக்கும் ரஞ்சிதாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரத்தை நான்கு மாதங்களுக்கு முன்பு அருண்குமார் கண்டுபிடித்து இருவரையும் எச்சரித்துள்ளார். இருந்தும், ரஞ்சிதா கணேஷ் தொடர்ந்து சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடன் தொல்லையால் இருந்த தனது கணவர் அருண்குமாரை தீர்த்துக்கட்டிவிட்டு, வட்டிக்கு பணம் தரும் பணக்காரனான, கள்ளக்காதலன் கணேஷ் உடன் சந்தோஷமாக வாழ திட்டம் தீட்டினார் ரஞ்சிதா. அருண்குமாரை கொல்வதற்கு கணேஷ் தனது நண்பர்களின் உதவியை கேட்டார்.
அவர்களும் ஜூன் 28 அன்று கொன்றுவிடலாம் என்று ஸ்கெட்ச் போட்டனர். ஹோட்டலை மீண்டும் திறப்பது தொடர்பான நிதி விஷயங்களைப் பற்றி பேசலாம் என்று அருண் குமாரை அழைத்துள்ளனர். அப்போது அருண்குமாரை, ஆட்டோரிக்ஷாவில் கட்டிகெரேபாளையத்திற்கு அழைத்து சென்றனர் சென்றனர். அங்கு, கணேஷும் அவரது நண்பர்களும் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றனர். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்நிலையில், ரஞ்சிதா, எதுவும் தெரியாதது போல் நாடகம் ஆடுவதற்காக ஜூன் 28-ம் தேதி மாண்டியாவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று, ஜூன் 30-ம் தேதி தான் திரும்பினார். இந்த செயலை பார்த்த போலீசார், அவர் மீது சந்தேகத்தை திருப்பினர். கடைசியில் கள்ளக்காதலன் மற்றும் நண்பர்களுடன் சிக்கி கொண்டார் என்று பெங்களுரூ போலீசார் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications