அறிமுக போட்டியிலேயே சதம்.. கங்குலி, சேவாக் வரிசையில் இடம்பிடித்த.. சபாஷ் ஷ்ரேயாஸ்!
கான்பூர்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டி-20 தொடரில் நியுசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்தது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
Recommended Video
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து களமிறங்கிய புஜாரா சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது.

கில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்த சிறிது நேரத்தில் புஜாராவும் 26 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ரஹானே 35 ரன்கள் எடுக்க, ஜேமிசன் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஜடேஜா அணியை சரிவில் இருந்து மீட்டு சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர் .சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ், ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர் .
இந்நிலையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்திய அணியில் ஷ்ரேயாஸ் 75 ரன்களும் ,ஜடேஜா 50 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இன்று காலை இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய உடனேயே ஷ்ரேயாஸ், கைல் ஜேமிசன் பந்தில் 2 பவுண்டரிகள் அடித்தார். கான்பூர் மைதானத்தில் சில நல்ல ஷாட்கள் ஆடி 96 ரன்களுக்கு வந்த ஸ்ரேயாஸ், கடைசியில் ஜேமிசன் பந்திலேயே 2 ரன்கள் எடுத்து தனது அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் கண்டார். ஷ்ரேயாஸ் , கான்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1969-ம் ஆண்டு லெஜண்ட் குண்டப்பா விஸ்வநாத் தன் முதல் டெஸ்ட்டிலேயே 137 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக சதம் அடித்த லாலா அமர்நாத், தீபக் ஷோடான், அர்ஜுன் கிரிபால் சிங், அப்பாஸ் அலி பெய்க், ஹனுமந்த் சிங், குண்டப்பா விஸ்வநாத், சுரேந்திர, மொகமது அசாருதீன், பிரவீன் ஆம்ரே, சவுரவ் கங்குலி, விரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோகித் சர்மா, பிரிதிவி ஷா வரிசையில் 16வது வீர்ராக ஷ்ரேயாஸும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications