பாஜகவை நம்பி யாரும் போக வேண்டாம்... ஏமாற்றி விடுவார்கள்.. எம்எல்ஏக்களுக்கு சித்தராமையா எச்சரிக்கை!
பாஜகவின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
ஹைதராபாத்: ஆசை வார்த்தைகளை கூறும் பாஜகவை நம்பி யாரும் போக வேண்டாம். யாரையும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதுதான் பாஜகவின் வழக்கம் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்களை, முன்னாள் முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபையில் 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளில் வென்றது.

பெரும்பான்மையை நிரூபிக்க 112 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், நாளை மாலை 4 மணிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டும்.
காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பாஜக ஆசைக்காட்டியுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பாஜகவின் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவையும் காங்கிரஸ் இன்று வெளியிட்டது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் தங்கியிருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆசை வார்த்தைக் கூறி எம்எல்ஏக்களை வளைக்க பாஜக பார்க்கிறது. அவர்களை நம்பி யாரும் போக வேண்டாம். யாரையும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதுதான் பாஜகன் வழக்கம். அதனால் எச்சரிக்கையுடன் இருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications