For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்படியா பண்ணுவீங்க?.. டிவிட்டரில் சண்டை போட்டுக்கொண்ட சித்தராமையா, எடியூரப்பா!

கர்நாடக தேர்தலை முன்னிட்டு சித்தராமையாவும், எடியூரப்பாவும் டிவிட்டரில் சண்டை போட்டு இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டிவிட்டரில் சண்டை போட்டுக்கொண்ட சித்தராமையா, எடியூரப்பா!- வீடியோ

    பெங்களூர்: குஜராத் தேர்தலுக்கு பின் தற்போது இந்தியா முழுக்க கர்நாடக தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் சித்தராமையா அரசு ஆட்சியை எப்படி எல்லாம் தக்க வைக்கலாம் என்று யோசித்து வருகிறது.

    அதுபோல் பாஜக கட்சியும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. உத்தரப்பிரதேச தேர்தல் மாடலை இங்கே பயன்படுத்தி வருகிறது.

    பசு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது. இந்த நிலையில் கர்நாடக தேர்தலை முன்னிட்டு சித்தராமையாவும், எடியூரப்பாவும் டிவிட்டரில் சண்டை போட்டு இருக்கிறார்கள்.

    பெங்களூரில் மோடி

    பெங்களூரில் மோடி

    தேர்தலை முன்னிட்டு நேற்று பிரதமர் மோடி பெங்களூர் வந்து இருந்தார். இதில் பேசிய மோடி கர்நாடகாவில் ஆளும்கட்சியால் ஏற்பட்டு இருக்கும் பல்வேறு பாதிப்புகள் குறித்து பேசினார். முக்கியமாக கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எந்த அளவிற்கு ஊழல் செய்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

    மோடிக்கு வரவேற்பு

    கர்நாடகா வந்த மோடிக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா வரவேற்பு அளித்தார். அது குறித்து டிவிட்டரில் ''பிரதமர் மோடியை வளர்ச்சியிலும், முதலீட்டிலும், புதுமையிலும் இந்தியாவில் நம்பர் 1ஆக இருக்கும் மாநிலத்திற்கு வரவேற்கிறோம். வித்தியாசமான வளர்ச்சி திட்டங்கள் மூலம் இந்தியாவில் முதன்மையாக பல விஷயங்கள் செய்து உள்ளோம். கர்நாடகாவின் வெற்றி இந்தியாவை பெருமைப்படுத்தும் என்று நம்பிக்கை இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    சித்தராமையா பதில்

    இதுகுறித்து முன்னாள் முதல்வரும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான எடியூரப்பா ''வரவேற்பிற்கு நன்றி. ஆமாம் கர்நாடகா பல விஷயங்களில் முதன்மையாக இருக்கிறது. ஊழல் மாநிலம், 3500க்கும் அதிகமான விவசாயிகள் மரணம், சட்ட ஒழுங்கு கேடு, அரசு ஊழியர்களின் மரணம், நல்ல ஊழியர்கள் இட மாற்றம், பெங்களூர் கட்டமைப்பில் ஏற்பட்டு இருக்கும் குளறுபடி என பல விஷயங்களில் முதன்மையாக இருக்கிறது'' என்று பதில் அளித்தார்.

    மீண்டும் பதிலடி

    இதற்கு சித்தராமையா பதில் அளித்துள்ளார் ''இதை இந்தியாவின் மிகப்பெரிய சுரங்க ஊழலை தனது ஆட்சியில் செய்தவர் குறிப்பிடுகிறார். கர்நாடகாவின் சுயாட்சியில் விருப்பம் இல்லாத ஒரு நபர் மட்டுமே இவ்வளவு வளர்ந்த ஒரு மாநிலத்தை ஊழல் மாநிலம் என்று குறிப்பிட முடியும்'' என்று பதில் அளித்து இருக்கிறார்.

    English summary
    Siddaramaiah and Yeddyurappa fight on Twitter over Karnataka election. They defending their respecting party in twitter, and the these tweets got viral in social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X