For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் ஒரு அக்கா, தங்கை செய்த சாதனையைப் பார்த்தீர்களா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்த வருட குடியரசு தின விழாவில் ஏகப்பட்ட புதுமைகள், சாதனைகள். அதில் ஒன்றாக சகோதரிகள் இருவர் செய்த இந்த சாதனையும் இடம் பெற்றுள்ளது.

பிரபோஜித் தேவதா மற்றும் அவரது சகோதரி ராம்னிக் தேவதா ஆகியோர் செய்த சாதனைதான் இது. இருவருமே இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையில் சேவை செய்து வரும் சகோதரிகள் ஆவர். இவர்களது சாதனை குடியரசு தின விழா அணிவகுப்பில் இருவரும் பீடு நடை போட்டு வந்தது.

Sister duo to represent Army and IAF on Republic Day

இருவரும் தத்தமது அணிப் பிரிவில் இடம் பெற்று கம்பீரமாக வீர நடை போட்டு அணிவகுத்து வந்தனர். பிரபோதா லெப்டினென்ட் ஆக இருக்கிறார். இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர் இவர். அவரது சகோதரி ராம்னிக் விமானப்படையைச் சேர்ந்தவர்.

இவர்களது தந்தை ஓய்வு பெற்ற கர்னல் குர்பால் சிங் தேவதா ஆவார். ராம்னிக் கான்பூரில் உள்ள விமானப்படைத் தளத்தில் பணியாற்றி வருகிறார். பிரபோஜித் ராணுவத்தின் ஏஎஸ்சி பிரிவில் பணியாற்றுகிறார்.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வருடம்தான் இந்திய பாதுகாப்புப் படையின் பெண்கள் பிரிவு அணிவகுப்பில் பங்கேற்றது என்பது நினைவிருக்கலாம்.

English summary
This year's Republic Day parade, apart from being special due to the presence of Barack Obama, will bring moments of joy and pride for two sisters. Prabhjot and Ramnik will march down Rajpath on January 26 but in separate contingents. While Lieutenant Prabhjot Daveta will be part of the Army's women contingent, her sister Flying Officer Ramnik will represent the Indian Air Force (IAF).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X