சாக்லெட் வாங்கிக் கொடுத்து 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. டெல்லியில் கொடுமை
டெல்லியில் 6 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது.
டெல்லி: டெல்லியில் 6 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் காஷ்மீரி கேட் பகுதியில் வசித்து வரும் தம்பதியினருக்கு 6 வயது பெண் குழந்தை உள்ளது. அந்த குழுந்தை கடந்த புதன்கிழமை இரவு தொடர்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்த குழந்தையின் தாய் அங்குள்ள அருணா ஆசப் அலி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும் சிறுமியின் அந்தரங்கப் பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த குழுந்தையின் தாய் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த குழந்தை, சிவா அங்கிள் அடித்துவிட்டார் என்று திரும்பத் திரும்ப கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் சிவா என்ற பெயர் கொண்ட 25 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது குற்றம் செய்த சிவா என்ற நபர், "நான்தான் சிறுமியை பலாத்காரம் செய்தேன்" என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து உடனே அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவா, வீடில்லாமல் தெருவில் வசிக்கும் நபர் என்றும், ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்றும் தெரிய வந்தது. விசாரணையில், "சாக்லெட் வாங்கிக் கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications