ராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லையா? குஜராத்தில் பயங்கரம்.. ஆபாச வீடியோவால் நேர்ந்த கும்பல் படுகொலை

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத்தில் தன்னுடைய மகளின் ஆபாசமான வீடியோ வெளியானதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோவை பகிர்ந்த சிறுவனின் வீட்டிற்கு குடும்பத்தோடு நியாயம் கேட்க சென்றபோது தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்தார்.

குஜராத் மாநிலம் கெடா மாவட்டம் நாதியாத் பகுதி அருகே அமைந்து உள்ளது சக்லசி கிராமம். இப்பகுதியை சேர்ந்த ராணுவர் வீரர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பள்ளி படிக்கும் இவரது மகளின் ஆபாச ஒன்று வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வந்ததாக் ராணுவ வீரர் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.

ஆன்லைனில் பகிர்ந்த ஆபாச வீடியோ

ஆன்லைனில் பகிர்ந்த ஆபாச வீடியோ

இந்த நிலையில் தனது மகளின் வீடியோவை வெளியிட்டது யார் என்று ராணுவ வீரர் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் அதை ஆன்லைனில் பகிர்ந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சிறுவனின் வீட்டிற்கு தனது குடும்பத்தினரோடு சென்ற ராணுவ வீரர் தனது மகளின் வீடியோ பகிரப்பட்டது குறித்து கேட்டு உள்ளார்.

கொல்லப்பட்ட ராணுவ வீரர்

கொல்லப்பட்ட ராணுவ வீரர்

அப்போது ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கும், 15 வயது சிறுவனின் குடும்பத்தாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒருகட்டத்தில் மோதல் ஏற்படவே சிறுவனின் குடும்பத்தினர் ராணுவ வீரரை கொடூரமாக தாக்கி இருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

போலீஸ் வழக்குப்பதிவு

போலீஸ் வழக்குப்பதிவு

இது தொடர்பாக குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், "ராணுவ வீரர், அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் மருமகனுடன் 15 வயது சிறுவனின் வீட்டிற்கு சென்றனர். அப்போது சிறுவனின் குடும்பத்தினர் ராணுவ வீரரை தொடர்ந்து தரக்குறைவாக பேசி உள்ளார்கள். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இறுதிச் சடங்கு

இறுதிச் சடங்கு

இந்த நிலையில், சிறுவனின் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ராணுவ வீரர் உயிரிழந்தனர். அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்து உள்ளார்கள்." என்றனர். இதனை தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. எல்லையில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கே நாட்டில் பாதுகாப்பு இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+