மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் திடீர் ராஜினாமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி; மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் இன்று திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய அரசின் தலைமை துணை வழக்கறிஞராக 2014-ம் ஆண்டு ரஞ்சித் குமார் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் அண்மையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

Solicitor General Resigns Ranjit Kumar

சில மாதங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம், ரஞ்சித்குமாரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிசீலித்திருந்தது. அண்மையில் அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தகி, பதவி நீட்டிப்பு வேண்டாம் என கூறியிருந்தார். இதையடுத்து கேகே வேணுகோபால் புதிய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், சொந்த காரணங்களுக்காக பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Solicitor General Ranjit Kumar today resigned for personal reasons.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற