குமாரசாமிதான் முதல்வர்.. மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு காங். வலை.. ஷாக்கில் பாஜக!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடக தேர்தலில் திடீர் டுவிஸ்ட்-வீடியோ

  பெங்களூர்: கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவ கௌடாவிடம் சோனியா ஆலோசனை நடத்தினார்.

  கர்நாடகா தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வந்ததால் அக்கட்சி தனி பெரும்பான்மை பெற்றுவிடும் என்று கருத்து நிலவின.

  இந்நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. கருத்து கணிப்புகள் கூறியபடி எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

  மூத்த தலைவர்

  மூத்த தலைவர்

  வடமாநிலங்களில் பாஜக கையாண்ட யுத்தியை போன்றே காங்கிரஸும் கையாள திட்டமிட்டது. அதன்படி தேவ கௌடாவை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் சந்தித்து பேசினார்.

  ஆதரவு கோரினார் சோனியா

  ஆதரவு கோரினார் சோனியா

  இதனிடையே மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவ கௌடாவுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போனில் ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரினார்.

  குமாரசாமிதான் முதல்வர்

  குமாரசாமிதான் முதல்வர்

  மேலும் காங்கிரஸை ஆதரித்தால் குமாரசாமிதான் முதல்வர் என்று வாக்குறுதி அளித்தார். இதை தேவ கௌடா ஏற்றுக் கொண்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கட்சியும் இணைந்து ஆளுநரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளன.

  பரபரப்பு

  பரபரப்பு

  கோவா போல் இங்கும் ஏற்படாமல் இருக்கவும் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து காய் நகர்த்தி வருகிறது. கர்நாடகத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sonia spoke to Deve Gowda and offers to make his son Kumarasamy as Chief Minister.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற