சோனியா காந்தி நாளை காஷ்மீர் பயணம்: மெகபூபாவை சந்தித்து ஆறுதல் !
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் மறைவைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை காஷ்மீர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக பதவி வகித்து வந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் முப்தி முகமது சயீத் கடந்த இரு தினங்களுக்கு முன்னர உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி காஷ்மீர் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இன்னும் சில தினங்களில் மெகபூபா முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை மெகபூபாவை சந்தித்து அவரது தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேனியா காந்தி டெல்லியில் இருந்து நாளை ஸ்ரீநகர் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், நாளை மாலை குப்கரில் மெகபூபாவை சந்திப்பார் என்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் குலாம் அகமது மிர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
முப்தி முகமது சயீத் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது சொந்த ஊரான பிஜ்பெஹராவுக்கு சோனியா செல்ல மாட்டார் என்றும் அவர் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications