இனி மேல் ஏ.டி.எம்.களில் 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்!
ஏ.டி.எம் மையங்களில் 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்க வழி செய்ய வங்கிகளுக்கு ஆர்.பி. ஐ உத்தரவிட்டு உள்ளது.
டெல்லி : நாடு முழுவதும் சில்லறை தட்டுப்பாட்டை நீக்க அனைத்து ஏ.டி.எம்.,களிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்க வழி வகை செய்யுமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நோட்டுகள் ஏற்கனவே இருந்த நோட்டுகளின் வடிவத்தை விட அளவில் சிறிதாக இருந்ததால் ஏ.டி.எம் மெஷின்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓர் ஆண்டு ஆகி இருந்தும், இன்னமும் புதிய நோட்டுகளுக்கு சில்லறை கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதைப் போக்க சமீபத்தில் ரிசர்வ் வங்கி புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், புதிய 200 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம்.,களில் கிடைக்க வழி செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. மேலும், விரைவில் இதை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், சில்லறைத்தட்டுப்பாடு நீங்கும் என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications