பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது இனி ஆதாருடன் அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்படும்...!
டெல்லி: இந்தியாவில் இனி ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கின்றவர்களுக்கு அதன் மூலமாகவே அனைத்து பரிசோதனைகளும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கீழ் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் மட்டும் செயல்படுத்திவந்த இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது.

டெல்லியில் இந்த முறையை அமல்படுத்தும்போது ஏற்பட்ட குளறுபடிகள் சரி செய்யப்பட்டு நாடு முழுவதும் 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு கீழ் உள்ள அனைத்து பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களில் பாஸ்போர்ட்-ஆதார் இணைந்த பரிசோதனை திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.
முகவரியை உறுதிப்படுத்தும் சான்றாக மட்டுமே தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல் இணைக்கப்படுகிறது. இதில் ஆதார் கார்டில் உள்ள விபரங்கள் மட்டுமே விண்ணப்பத்துடன் ஒத்துப்போகிறதா என்று இப்போது ஆய்வு செய்யப்படுகிறது.
இனி பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் விண்ணப்பதாரர் தனது விரல் ரேகையை பதிவு செய்யும் போது அது யூனிக் ஐடென்டிபிகேஷன் அதாரிட்டி ஆப் இந்தியா எனப்படும் ஆதார் மைய சர்வருடன் இணைக்கப்படும்.
அப்போது ஆதார் டேட்டா பேசில் உள்ள விபரங்கள் உடனே கணினி திரையில் தெரியும். விண்ணப்பதாரரின் புகைப்படம், விரல் ரேகைகள் மற்றும் ஆதார் எண் எடுக்கும் போது வழங்கப்பட்ட அனைத்து விபரங்களும் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் ஒருவர் அளித்துள்ள விபரங்களுடன் ஒத்துப்போகிறதா என்பது சரிபார்க்கப்படும்.
பாஸ்போர்ட் பெறுவோர் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற பல்வேறு தவறுகளை தடுக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதே வேளையில் ஆதார் இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் எடுக்க முடியும் என்ற கட்டாயம் இல்லை.
எனினும், ஆதார் வைத்துள்ளவர்களின் விபரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆதார் இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்ட், பேங்க் பாஸ்புக், டெலிபோன் பில் உள்ளிட்ட ஆவணங்களையும் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications