For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவ மழை- மகிழ்ச்சியில் மக்கள்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இன்று துவங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே மே மாத இறுதியில் தொடங்கி விடும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தப்படி, பருவ மழை தொடங்கவில்லை. அதற்கான அறிகுறிகள் தென்பட்டும், மழை பெய்வது தாமதமானது.

Southwest ‪monsoon widespread rain expected during next 48 hours

வளிமண்டல சுழற்சி காரணமாக கோடையில் பெய்த மழையால் தென்மேற்கு பருவ மழை தாமதமாவதாக வானிலை ஆய்வு மையம் கூறியது.

அதன்படி ஜூன் 4 ஆம் தேதி பருவ மழை பெய்யும் என்று கூறப்பட்டது. இப்போது 48 மணி நேரத்திற்கு பிறகு அதாவது வருகிற 6 ஆம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பருவ மழை தொடங்குவதற்கு அறிகுறியாக நேற்று கேரள மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. பாறசாலை முதல் காசர் கோடு வரை மழையின் தாக்கம் இருந்தது. இரவு இடி மற்றும் மின்னலுடன் மழை கொட்டியது குறிப்பிடத்தக்கது.

English summary
South Western monsoon has reached Kerala. Today there are yadatar part of the State in large rain recorded. The weather Department high officials told our correspondent Thiruvananthapuram during the next 24 hours away until rain likely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X