கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசி, தம்பியை கடத்திய முலாயம் கட்சி தலைவரின் மகன்
மொராதாபாத்: உத்தர பிரதேசத்தில் 19 வயது கல்லூரி மாணவி மீது வீடு புகுந்து ஆசிட் வீசிய சமாஜ்வாடி கட்சி தலைவரின் மகன் அந்த பெண்ணின் தம்பியை கடத்திச் சென்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள முல்லா பட்டிவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பாயல்(19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி உள்ளூரைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அனில் பிஷ்னோயின் மகனும் வழக்கறிஞருமான மணி பிஷ்னோய் பாயலின் வீட்டுக்கு சென்று அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அதற்கு பாயல் எதிர்க்கவே மணி அவர் மீது ஆசிட் வீசிவிட்டு சென்றுவிட்டார். இது குறித்து பாயல் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து மணி பாயலின் 10 வயது தம்பியை கடத்தி வைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கக் கூடாது என்று மிரட்டினார். இதனால் நீதிமன்றத்தில் ஆஜரான பாயல் தன் மீது தவறுதலாக ஆசிட் பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
அதன் பிறகு மணி பாயலின் தம்பியை வீட்டுக்கு அனுப்பி உள்ளார். தம்பி வீடு வந்து சேர்ந்ததும் பாயல் நடந்த சம்பவம் பற்றிய உண்மையை போலீசில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போதிலும் மணி மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இது குறித்து பாயல் கூறுகையில்,
பணத்தை பெற்றுக் கொண்டு மணியுடன் சமரசம் ஆகுமாறு போலீசார் தெரிவித்தனர். நான் தான் மணியை மிரட்டியதாக போலீசார் என்னை குறை கூறுகிறார்கள். இதனால் எங்கள் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications