Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இங்க வாங்க சாப்பிடுங்க.. நல்லாருக்கா.. அப்ப டிரம்ப் நீங்க வாங்க.. அசத்தும் சுரேஷ் கன்னா!

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் வருகையையொட்டி அகமதாபாத்தில் சுரேஷ் கன்னா கை வண்ணத்தில் ஸ்பெஷல் கமான் என்ற குஜராத்தி உணவு தயார் செய்யப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவர் நேராக அகமதாபாத்திற்கு வந்து அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறார். பின்னர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை மனைவி மெலானியாவுடன் சுற்றி பார்க்கிறார்.

Special Khaman is being prepared as US President by Chef Suresh Khanna

முன்னதாக சபர்மதி ஆசிரமத்தை அடைந்தவுடன் அவர்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு குஜராத்தி வகை உணவுகளை டிரம்ப் ருசிக்கவுள்ளார்.

டொனால்ட் டிரம்பிற்கு கமான் என்ற குஜராத்தி உணவு மிகவும் பிடிக்குமாம். இதனால் சமையல் கலைஞர் சுரேஷ் கன்னா ஸ்பெஷல் கமான் உணவுகளை தயார் செய்து வருகிறார். டிரம்புக்கு வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் சைவ உணவுகளே ஆகும்.

முதலில் இந்த கமான் உணவை உணவுத் துறை ஆய்வாளர்கள் ருசித்து பார்ப்பர். அனைத்தும் சோதனை செய்யப்பட்டவுடன் நாளை வரும் விருந்தினர்களுக்கு அளிக்கப்படுகிறது.

குஜராத்தி உணவான இந்த கமான் உணவு ஊறவைத்த கடலை பருப்பை அரைத்தோ அல்லது கடலை மாவை பயன்படுத்தியோ செய்யப்படுகிறது. இது டோக்லா போன்றதுதான். ஆனால் அது இல்லை. கமான் கடலை மாவினால் செய்யப்படுகிறது. டோக்லாவோ அரிசி மற்றும் கொண்டைக்கடலையால் செய்யப்படுகிறது. டோக்லாவை காட்டிலும் கமான் மிகவும் மிருதுவாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+