வை ராஜா வை... கிளப்புகளில் பணம் வைத்து "ரம்மி" விளையாட உச்சநீதிமன்றம் அனுமதி
டெல்லி: தமிழகத்தில் உள்ள கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணம் வைத்து ரம்மி விளையாடுபவர்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், ரம்மி விளையாட அனுமதி கோரியும், கிளப் உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று மாலை (அக்டோபர் 18) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் திறன் மேம்பாட்டிற்காகவே ரம்மி விளையாடப்படுவதாக கிளப் உரிமையாளர்கள் சார்பில் வாதம் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்தில் உள்ள கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
ரம்மி ஆடுவது சூதாட்டத்தின் கீழ் வராது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரம்மி விளையாட்டை தவிர, வேறு ஏதாவது சட்டவிரோத சீட்டு விளையாட்டு விளையாடப்பட்டாலோ, அது தொடர்பான தகவல்கள் வந்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடையில்லை என்றும் அப்போது நீதிபதி தீர்ப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications