For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா வந்த இலங்கை கடற்படைத் தலைமை தளபதி ஜெயந்த பரேராவுக்கு ராணுவ மரியாதை

Google Oneindia Tamil News

டெல்லி: ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை கடற்படை தலைமைத் தளபதி ஜெயந்த பரேராவுக்கு இன்று ராணுவ மரியாதை அளிக்கப் பட்டது.

இந்தியக் கடற்படையின் வீர விருது இலங்கை கடற்படைத் தளபதிக்கு வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதற்கு மதிமுக, நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு தமிழக கட்சிகள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தன.

Sri Lankan Navy Chief receives Guard of Honour

ஆனால், சீனா, இந்து மகா சமுத்திரத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுக்கும் முகமாகவே இந்தியா, இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தி வருகிறது எனக் கூறப்பட்டது.

எதிர்ப்பு...

எனவே, இலங்கை கடற்படை தளபதியை இந்தியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது என தமிழகக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

விருது பெற்றார்...

இந்த நிலையில், ஐந்து நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார் இலங்கை கடற்படைத் தலைமை தளபதி ஜெயந்த் பரேரா. இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவருக்கு, ராணுவ மரியாதை அளிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இந்திய கடற்படைத் தளபதி ஆர்.கே.தோவனை சந்தித்துப் பேசினார்.

சீன முதலீடுகள் குறித்து விளக்கம்...

இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்த் பரேரா கூறுகையில், இலங்கை கடற்பகுதியில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் முற்றிலும் வர்த்தக நோக்கத்தில் அமைந்தவைதான். மாறாக, எந்த ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், குறிப்பாக இந்தியாவுக்கு எதிரானதல்ல என்றார்.

உறவு பலப்படும்...

இது குறித்து தோவன் கூறுகையில், ‘இந்தச் சந்திப்பின் மூலம் இந்தியா - இலங்கை உறவு மேலும் பலப்படும் எனத் தெரிவித்தார்.

ராணுவ மரியாதை...

இந்த நிலையில், ஐந்து நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார் இலங்கை கடற்படைத் தலைமை தளபதி ஜெயந்த் பரேரா. இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவருக்கு, ராணுவ மரியாதை அளிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இந்திய கடற்படைத் தளபதி ஆர்.கே.தோவனை சந்தித்துப் பேசினார்.

English summary
The Navy Chief of Sri Lanka Vice Admiral Jayantha Perera on Monday received the Guard of Honour at South Block in New Delhi. Perera also met Indian Navy Chief Admiral RK Dhowan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X