For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சு.சுவாமி அழைப்பு- மகிந்த ராஜபக்சே செப்.12-ல் டெல்லி கருத்தரங்கில் பங்கேற்பு

டெல்லியில் செப்டம்பர் 12-ல் நடைபெறும் கருத்தரங்கில் ராஜபக்சே பங்கேற்க உள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அழைப்பின் பேரில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே செப்டம்பர் 12-ந் தேதி டெல்லியில் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க உள்ளார்.

சீனாவின் பெருமளவு நிதி உதவியுடன் இலங்கை அதிபர் தேர்தலை ராஜபக்சே எதிர்கொண்டார் என அண்மையில் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில்தான் தென்னிலங்கை பகுதியானது சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டது.

 Srilanka Former President Rajapaksa to visit India on Sep 12

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார் என்பதற்காக பாஜகவின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து மகிந்த ராஜபக்சேவை ஆதரித்து வருகிறார். இன்று சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் டெல்லியில் செப்டம்பர் 12-ல் நடைபெறும் கருத்தரங்கில் ராஜபக்சே பங்கேற்க இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

அதில், செப்டம்பர் 12-ந் தேதி ராஜபக்சே உரை நிகழ்த்த இருப்பதை கேட்க வாருங்கள். ராஜீவ் காந்தியை கொலை செய்த பயங்கரவாதிகளிடம் இருந்து தமது நாட்டை விடுவித்தவர் அவர். அவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வோம் என பதிவிட்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

English summary
Srilanka Former President Rajapaksa will visit to India on Sep 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X