For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் 91 முக்கிய அணைகளில் எவ்வளவு தண்ணீர் ஸ்டாக் இருக்கிறது என்று தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் உள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் அவற்றின் முழுக் கொள்ளளவில் 31 சதவீத அளவே நீர் இருப்பதாக புள்ளிவிவரத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அதாவது மொத்த நீர் இருப்பு 50.92 பில்லியன் கியூபிக் மீட்டர்தான். (பிசிஎம்) இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 87 சதவீத அளவே ஆகும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர் இருப்பு குறைவாக இருப்பது கவலைக்குரியதாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் இது நல்ல அளவுதான் என்றும் அதிகாரிகள் ஆறுதல் கூறுகிறார்கள்.

நாட்டில் உள்ள 85 முக்கிய நீர்த் தேக்கங்களை மத்திய நீர் ஆணையம் தான் கண்காணித்து வருகிறது. வாரந்தோறும் நீரின் அளவு கணக்கிடப்படுகிறது. இவற்றில் 37 அணைக்கட்டுகளில் நீர் மின்சாரம் எடுக்கப்படுகிறது. அதிலிருந்து 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த 91 அணைகளின் மொத்த கொள்ளளவு 157.799 பிசிஎம் ஆகும். இது நாட்டின் மொத்த நீர்த்தேக்கங்களின் முழுக் கொள்ளளவில் (253.388 பிசிஎம்) 62 சதவீதமாகும்.

பிராந்திய வாரியாக நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம்:

வடக்குப் பிராந்தியம்:

வடக்குப் பிராந்தியம்:

இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளடக்கிய வடக்குப் பிராந்தியத்தில் 6 நீர்த் தேக்கங்கள் உள்ளன. இவர்றின் மொத்த கொள்ளலவு 18.01 பிசிஎம் ஆகும். இதில் தற்போது 6.39 பிசிஎம் நீர் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டை விட தற்போது நீர் இருப்பு இங்கு குறைவாக உள்ளது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது பரவாயில்லை ரகம்.

கிழக்குப் பிராந்தியம்:

கிழக்குப் பிராந்தியம்:

ஜார்க்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் இதில் அடக்கம். மொத்தம் 15 நீர்த்தேக்கங்கள் இதில் உள்ளன. மொத்த நீர் கொள்ளலவு 18.83 பிசிஎம் ஆகும். தற்போது 8.49 பிசிஎம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டை விட இப்போது நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.

மேற்குப் பிராந்தியம்:

மேற்குப் பிராந்தியம்:

குஜராத், மகாராஷ்டிரா அடங்கிய மேற்குப் பிராந்தியத்தில் 27 அணைக்கட்டுகள் உள்ளன. மொத்த கொள்ளளவு 27.07 பிசிஎம் ஆகும். தற்போது இருப்பு வெறும் 9.71 பிசிஎம்தான். கடந்த ஆண்டை விட குறைவாகவே நீர் இருப்பு உள்ளது.

மத்திய பிராந்தியம்:

மத்திய பிராந்தியம்:

உ.பி, உத்தரகாண்ட், ம.பி., சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 12 அணைகள் உள்ளன. இதன் மொத்தக் கொள்ளளவு 42.30 பிசிஎம் ஆகும்.

தென் பிராந்தியம்:

தென் பிராந்தியம்:

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் இதில் வருகின்றன. மொத்தம் 31 அணைகள் உள்ளன. மொத்த நீர் இருப்பு 51.59 பிசிஎம் ஆகும். தற்போதைய நீர் இருப்பு 9.52 பிசிஎம்தான்.

கடந்த ஆண்டை விட தற்போதைய ஆண்டில் ஓரளவுக்கு நல்ல நீர் இருப்பு உள்ள மாநிலங்கள் இவைதான் - தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகியவை.

கடந்த ஆண்டு இருந்த அதே அளவிலான நீர் இருப்பு திரிபுராவில் உள்ளது. கடந்த ஆண்டை விட குறைந்த அளவு நீர் இருப்பு உள்ள மாநிலங்கள் - ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, உ.பி. உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், சட்டிகரஸ்கர், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவை ஆகும்.

English summary
The Water Storage available in 91 important reservoirs of the country as on April 16, 2015 was 50.92 BCM which is 32% of total storage capacity of these reservoirs. This storage is 87% of the storage of corresponding period of last year and 113% of storage of average of last ten years. The present storage position during current year is less than the storage position of last year but is better than the storage of average of last ten years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X