முன்னாள் முதல்வரை காருக்குள்ளேயே சிறைவைத்த தெருநாய்கள்... திருவனந்தப்புரத்தில் பரபரப்பு
முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை தெரு நாய்கள் வளைத்து காருக்குள்ளேயே சிறை வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காருக்குள்ளேயே சிக்கித்தவித்த உம்மன்சாண்டியை அப்பகுதி பொதுமக்கள் காப்பாற்றினர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் அம்மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தெரு நாய்களிடம் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. காரை முற்றுகையிட்டு தாக்க முயன்ற நாய்களை பொதுமக்கள் விரட்டியடித்து, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை காப்பாற்றினர்.
கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. சாலைகளில் கூட்டம் கூட்டமாக அலையும் இந்த தெருநாய்களில் பல வெறி நாய்களாக மாறி பொது மக்களை கடித்து குதறி வருகிறது.
தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்ததால் அவைகளை கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து தெரு நாய்களை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தப்பிய தெருநாய்கள்
ஆனால் இந்த நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர் மேனகாகாந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மிருகவதை எதிர்ப்பு அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தெரு நாய்களை கொல்வது நிறுத்தி வைக்கப்பட்டது.

நாய் கடிக்கு பலர் பலி
வெறிநாய் கடிக்கு இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று ஏராளமானவர்கள் நாள்தோறும் நாய் கடிக்கு சிகிச்சை பெறுவதற்காக கேரள மருத்துவமனைகளுக்கு குவிந்து வருகின்றனர்.

நாய்களிடம் சிக்கிய உம்மன் சாண்டி
இந்த நிலையில் தெரு நாய்களிடம் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி சிக்கி தவித்த சம்பவமும் நடந்துள்ளது. உம்மன்சாண்டி மிகவும் எளிமையானவர். எந்தவிதமான ஆடம்பரத்தையும் விரும்பமாட்டார். அவர் முதல்வராக இருந்தபோதும் சரி இப்போதும் சரி சாதாரணமாக அரசு பஸ்களிலும், ரெயில்களிலும் பயணம் செய்வார்.

காரை சுற்றி வளைத்த நாய்கள்
இந்த நிலையில் உம்மன் சாண்டி சொந்த வேலை காரணமாக கோவைக்கு சென்றுவிட்டு ரெயில் மூலம் கோட்டயம் வந்தடைந்தார். பின்னர் காங்கிரஸ் தலைவர் சிபிஜோன் காரில் சென்ற உம்மன்சாண்டி அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக சென்றார்.ஓட்டல் அருகே அவர்கள் காரை நிறுத்தியதும் ஏராளமான தெரு நாய்கள் அவர்களது காரை சுற்றிவளைத்துக் கொண்டன.

காரின் மீது ஏறி குரைத்த நாய்
சில நாய்கள் காரின் மீது ஏறி குரைக்க தொடங்கியது. அந்த காரில் குளிர்சாதன வசதி கிடையாது என்பதால் காரின் கண்ணாடிகளை அவர்கள் இறக்கி விட்டிருந்தனர். நாய்கள் மிரட்டலால் அவர்கள் கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு காருக்குள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

காப்பாற்றிய பொதுமக்கள்
அப்போது அந்த வழியாக வந்த சிலர் இதை பார்த்து விட்டு காருக்குள் இருக்கும் யாரோ தெரு நாய்களிடம் சிக்கிக்கொண்டனர் என நினைத்து கல்வீசி நாய்களை விரட்டியடித்தனர். அதன் பிறகுதான் காருக்குள் இருந்தது முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி என்பது அவர்களுக்கு தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த உம்மன் சாண்டி
தெருநாய்கள் சுற்றி வளைத்தால் உம்மன் சாண்டி பெரும் அதிர்ச்சியடைந்தார். தன்னை காப்பாற்றியதற்காக பொது மக்களிடம் நன்றி தெரிவித்துவிட்டு அவர் அங்கிருந்து றப்பட்டு சென்றார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications