பெங்களூர் போயிங் விமான நிறுவனத்தில் 180 என்ஜினியர்கள் திடீர் டிஸ்மிஸ்! சென்னை பணியாளர்கள் ஷாக்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் போயிங் விமான நிறுவனத்தில் 180 என்ஜினியர்கள் கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது பணியாளர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட போயிங் விமான நிறுவனத்தின் பெங்களூர் பிரிவில் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. போயிங் நிறுவனம் சர்வதேச அளவில் எதிர்கொண்ட நெருக்கடியால் தற்போது ஒரே நேரத்தில் 180 என்ஜினியர்களை பணி நீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டது போயிங் விமான நிறுவனம். இந்த நிறுவனத்தில் சில உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யக் கூடியதாக பெங்களூர் பிரிவு செயல்பட்டு வருகிறது. சென்னையில் போயிங் விமான நிறுவனத்தின் டெக்னிக்கல் பிரிவு செயல்படுகிறது.

பெங்களூர் பிரிவில் போயிங் விமான நிறுவனம் பெருமளவு முதலீடு செய்திருந்தது. இந்த பிரிவின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.8,000 கோடி வருவாய் ஈட்டுகிறது போயிங் விமான நிறுவனம். போயிங் நிறுவனத்தில் மொத்தம் சுமார் 7,000 பேர் பணிபுரிகின்றனர்.
சர்வதேச அளவில் போயிங் விமான நிறுவனம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த நிறுவனத்தின் நெருக்கடி நீடித்து வருகிறது. இதனால் ஆட்குறைப்பு பணி வெகுவேகமாக தொடங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பெங்களூர் பிரிவில் 180 என்ஜினியர்கள் ஒரே நேரத்தில் கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமலேயே 180 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை வெடித்திருக்கிறது. பெங்களூர் நிறுவனத்தில் 180 என்ஜினியர்கள் ஒரே நேரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதால் சென்னை உள்ளிட்ட இதர அலுவலக பணியாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications