பாலியல் குற்றவாளி ஆசாராம் பாபுவுக்கு ஜாமீன்! ஆனாலும் சிறையிலிருந்து வெளியே வர முடியாது! ஏன் தெரியுமா
காந்திநகர்: சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சாமியார் ஆசாராம் பாபு. 83 வயதான இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ காரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. அதேநேரம் ஜாமீன் கிடைத்தாலும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழலில் ஆசாராம் பாபு இருக்கிறார். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு.. இவரது இயற்பெயர் அசுமல் சிறுமலானி ஹர்பலானி. தன்னைத்தானே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் இவர், பல இடங்களில் ஆசிரமங்களை நடத்தி வருகிறார்.

அதிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் இவருக்கு ஏகப்பட்ட பக்தர்கள் இருக்கிறார்கள். அங்கு ஜோத்பூர் உள்படப் பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. ஒரு கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் கூட இவரைப் பார்க்க பக்தர்கள் வரத் தொடங்கினர்.
ஆசாராம் பாபு:
இந்தச் சூழலில் தான் கடந்த 2013ம் ஆண்டு இவர் மீது திடீரென பாலியல் புகார் எழுந்தது. அதாவது 2013ல் ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் வைத்து பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் 83 வயதான அசுமல் சிறுமலானி ஹர்பலானி கைது செய்யப்பட்டார். அதேபோல 2013ஆம் ஆண்டு குஜராத்தின் காந்திநகர் அருகே உள்ள ஆசிரமத்தில் மற்றொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகவும் அவர் கைதானார்.
சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையே அவருக்குக் கடந்த மாதம் அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து கடந்த மாதம் பரோலில் வெளியே வந்தார். அவரது 15 நாள் பரோல் நிறைவடைந்த நிலையில், ஜன. 1ம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன்:
இதற்கிடையே ஆசாராம் பாபுவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அவருக்கு மார்ச் 31 வரை இடைக்கால ஜாமீன் வழங்கினர். ஆசாராமை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரம் எங்குச் சிகிச்சை பெறலாம் என்பது குறித்து எந்தவொரு உத்தரவையும் நீதிபதி பிறப்பிக்கவில்லை.
வெளியே வர முடியாது:
ஜாமீன் கிடைத்துவிட்ட போதிலும் இப்போது அவரால் சிறையை விட்டு வெளியே வர முடியாத சூழல் இருக்கிறது. ஏனென்றால் மற்றொரு பலாத்கார வழக்கில் அவர் இடைக்கால ஜாமீன் பெற வேண்டியிருப்பதால், சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக உடல்நிலை பாதிப்பு காரணமாக ஆசாராமுக்கு கடந்தாண்டு புனே மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே வழக்கில் அவரது இரண்டு கூட்டாளிகளுக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்தது. அதேபோல காந்திநகர் ஆசிரமத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கிலும் அவர் 2023 ஜூன் மாதம் அவர் தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications