தெலுங்குதேசம் எம்.பிக்கள் ராஜினாமா எதிரொலி.. சுரேஷ் பிரபுக்கு விமான போக்குவரத்துறை ஒதுக்கீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தெலுங்குதேசம் எம்.பிக்கள் ராஜினாமா செய்த காரணத்தால் தற்போது அமைச்சர் சுரேஷ் பிரபுக்கு விமான போக்குவரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்த நிலையில், இரண்டு கட்சிகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் இருந்து இரண்டு தெலுங்குதேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.

Suresh Prabhu appointed as the new Air Transport Minister

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் செளத்ரி மற்றும் அசோக் கஜபதி ராஜூ ராஜினாமா செய்து இருக்கிறார்கள். இதில் கஜபதி ராஜூ விமான போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார்.

அவர் பதவி விலகியதை அடுத்து விமான போக்குவரத்துறையை பிரதமர் மோடி தற்காலிகமாக கவனித்து வந்தார். இந்த நிலையில் தற்போது இதற்கு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி விமான போக்குவரத்துறையை அமைச்சர் சுரேஷ் பிரபு கூடுதலாக கவனிப்பார். சுரேஷ் பிரபு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசுத்தலைவர் வெளியிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
2 Telugu Desam ministers resigned from the Union Cabinet. Due to the resignation of Ashok Gajapathi Raju, who was the former Air Transport ministry, Suresh Prabhu appointed as the new Air Transport Minister.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற