இறந்துபோன மகனுக்கு ஹரித்வாரில் திதி கொடுத்த சில்வஸ்டர் ஸ்டாலோன்
ஹரித்வார்: ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சில்வஸ்டர் ஸ்டாலோன் தனது இறந்த மகனுக்கு இந்தியாவின் ஹரித்வாரில் இந்து முறைப்படி ஸ்ரார்தம் செய்து திதி அளித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹாலிவுட் திரைப்பட உலகில் ஏராளமான ஆக்ஷன் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன். இவருடைய இளைய மகன் சாகே ஸ்டாலோன்.
இவரும் ஹாலிவுட் நடிகர் ஆவார். அத்துடன் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். இவர் தனது தந்தையுடன் இணைந்து 1990 ல் வெளிவந்த "ராம்போ-5", 1996 இல் வெளிவந்த டே லைட் ஆகிய 2 படங்களில் நடித்து இருக்கிறார்.

2012 ஆம் ஆண்டு மரணம்:
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டில் சாகே ஸ்டாலோன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் தன்னுடைய வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவர் அதிக போதை மருந்து உட்கொண்டதால் இறந்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

கடும் மன உளைச்சலில் அப்பா:
மகன் மரணத்தால் ஸ்டாலோன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் இறந்துபோன தன்னுடைய மகனின் ஆத்மா சாந்தியடைய இந்தியாவில் ஹரித்வாரில் திதி கொடுக்க முடிவு செய்தார்.

ஹரித்வாரில் திதி:
அதற்காக தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் மைக்கேல், அவருடைய மனைவி மற்றும் மகன்களை ஹரித்வார் அனுப்பி அகால மரணமடைந்தவர்களுக்காக செய்யப்படும் "ஸ்ரார்தம்" என்னும் திதியை அளித்துள்ளார்.

கூட்டத்தை கூட்ட வேண்டாமே:
ரசிகர் கூட்டம் போன்றவற்றை தவிர்க்க தான் வரவில்லை என்றும், ரத்த சம்பந்தமுடையவர்களை வைத்து கொடுக்கலாம் என்பதாலேயே தன்னுடைய சகோதரரை வைத்து திதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications