எடப்பாடியை சந்திக்க மறுப்பு-டெல்லி தமிழ்நாடு இல்லம் முன்பாக தமிழ் செய்தியாளர்கள் திடீர் போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன்பு திடீரென தமிழக செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். இதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்றுள்ளார்.

 tamil journalist protest in delhi

டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து செய்தி சேகரிக்க தமிழக செய்தியாளர்கள் முற்பட்டனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 tamil journalist protest in delhi

இதையடுத்து அவர்கள் தமிழ்நாடு இல்லம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
tamil journalist protest in in front of delhi tamilnadu house
Please Wait while comments are loading...