Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. உடல்நலக்குறைவு.. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துக.. ராஜ்நாத்சிங்கிற்கு சு.சுவாமி கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரின் முடிவற்ற மருத்துவமனை சிகிச்சையின் காரணமாக, தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. எனவே, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

Tamil Nadu in disarray, impose President's rule urges Subramaniam Swamy

நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஐஎஸ்ஐஎஸ் ஸ்லீப்பர் செல்கள் ஊருடுவியுள்ளனர். திராவிட கழகம், விடுதலை புலிகளில் எஞ்சியவர்கள், நக்சல்கள், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க வாய்ப்புள்ளது.

எனவே, சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி, தமிழகத்தில் 6 மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டும். சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் Armed Forces (Special Powers) Acts எனும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜெயலலிதா மீண்டும் அலுவல்களை மேற்கொள்ளும்வரை இந்த நடவடிக்கை தேவைப்படுகிறது. இவ்வாறு ராஜ்நாத்சிங்கிற்கு சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+