பாஜக கோட்டையிலேயே.. சைலண்ட்டாக சம்பவம் செய்த ஸ்டாலின்.. வாரணாசியில் திரும்பி பார்த்த மோடி.. போச்சே
காசி: தமிழ்நாடு அரசியலில் எப்படியாவது முக்கிய கட்சியாக உருவாகி விட முடியாதா என்று தீவிர முயற்சி செய்து வரும் பாஜகவிற்கு செக் வைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கிய சம்பவம் ஒன்றை செய்தார்.
தமிழ்நாடு அரசியலில் எப்படியாவது எதிர்க்கட்சியாக உருவெடுத்துவிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. இதற்காக பல்வேறு முயற்சிகளை அந்த கட்சி செய்து வருகிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் புகார்கள், ஆளுநரை வைத்து பிரஷர் கொடுப்பது, போராட்டங்களை செய்வது என்று பிஸியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் தேசிய அளவில் மோடி, அமித் ஷாவும் தமிழ்நாட்டில் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.

என்ன பிளான்?
முக்கியமாக தமிழ் மீது தீவிர அக்கறை உள்ளதாக பாஜக காட்டிக்கொள்கிறது. பிரதமர் மோடியும் செல்கிற இடங்களில் எல்லாம் தமிழ் பற்றி பேசி வருகிறார். உலகின் முதல் மொழி என்று பல இடங்களில் பிரதமர் மோடி பேசி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆர்வலர்களை கவர வேண்டும், தமிழ் மக்களை கவர வேண்டும் என்பதற்காகவே உத்தர பிரதேசத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பாஜக தொடங்கி உள்ளது. நவம்பர் 19ம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கியது. டிசம்பர் 16ம் தேதி வரை இந்த நிகழ்வு நடக்க உள்ளது. தமிழ் மீது பாஜகவிற்கு உள்ள பற்றினை காட்டும் விதமாக இந்த நிகழ்வை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது.

அழைக்கவில்லை
இது மொழி சார்ந்த நிகழ்வு என்பதை தாண்டி அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வேற்று மாநிலங்களுக்கும் தமிழை கொண்டு சென்று இருக்கிறோம், பாருங்கள் என்று பாஜக சொல்லாமல் சொல்லி இருக்கிறது. அதோடு இளையராஜா எம்பியை அழைத்து வந்து பேச வைத்தது என்று மிக கவனமாக திட்டமிட்டு இந்த நிகழ்வை பாஜக ஏற்பாடு செய்து உள்ளது. இதெல்லாம் போக தமிழ்நாடு அரசில் இருந்து யாருக்கும் இந்த நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு சார்பாக முதல்வருக்கோ, அல்லது இந்து சமய அறநிலையத்துறைக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.

பதிலடி
இந்த நிலையில்தான் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நேற்று பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு ஆன்லைன் மூலம் முதல்வர் ஸ்டாலின் இந்த நினைவு இல்லத்தை திறந்து வைத்தார். பாரதிக்கு வாரணாசியில் ஒரு இல்லம் இருக்கிறது. அந்த இல்லத்தை புனரமைக்க கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கான பணிகளை கடந்த சில நாட்களாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் சில வாரணாசி சென்று செய்து கொண்டு இருந்தனர்.

திறந்து வைத்தார்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அந்த நினைவு இல்லத்தை திறந்து வைத்தார். அங்கு இருக்கும் பாரதியார் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பாஜகவின் கோட்டையான வாரணாசியில், பாஜக நிர்வாகிகள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் இங்கே இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் பாரதி சிலையை திறந்து வைத்துள்ளார். தமிழ்நாடு அரசை அழைக்காமல் காசியில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சியை பாஜக நடத்திய நிலையில் அவர்கள் மண்ணிலேயே, அவர்களை அழைக்காமல் முதல்வர் ஸ்டாலினும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications