தமிழ்நாடு பட்ஜெட் 2022: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜனின் நிதிநிலை அறிக்கை - சிறப்பம்சங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்து விளக்கி வருகிறார். தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சியின் முதல் பகுதி பட்ஜெட்டைத் தொடர்ந்து பிந்தைய பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
இதையடுத்து இப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அரசு தனது முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது.
இதையொட்டி சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் பேரவை கூடியதும் பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கோரினார். ஆனால், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு அது குறித்து பரிசீலிப்பதாக பேரவை சபாநாயகர் கூறினார். இதையடுத்து அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக கூச்சலிட்டனர்.
இந்த அமளிக்கு மத்தியில் நிதிநிலை அறிக்கை அம்சங்களை விளக்கி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசத் தொடங்கினார். காகிதம் இல்லா பட்ஜெட் ஆக இன்றைய நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

விரிவான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பிற செய்திகள்:
- கணவர் பெட்ரோல் நிலைய வரிசையில், மனைவி மண்ணெண்ணை வரிசையில் – இலங்கையிலிருந்து கள நிலவரம்
- யுக்ரேனில் எத்தனை ரஷ்ய படையினர் கொல்லப்பட்டனர்?
- யுக்ரேன் போர்: போர்தந்திர அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துமா?
- இஸ்லாத்தில் ஹிஜாப் - நீதிமன்றங்கள் இதை தீர்மானிக்க வேண்டுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












Click it and Unblock the Notifications