பட்ஜெட் 2018: வருமான வரிக்கான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை! மாத சம்பளதாரர்கள் பெரும் ஏமாற்றம்!!
வருமான வரிக்கான உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு வரி செலுத்துவோரிடையே ஏற்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான (2018-2019) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
மோடி அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்யவுள்ள கடைசி முழு பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. இதில் ஏராளமான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. மேலும் மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களையும், அடுத்து நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலையும் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் மக்களை கவரும் வகையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வருமான வரிக்கான உச்சவரம்பு
இந்த முறை இரண்டாவது முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் சேர்த்து பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் வருமான வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

பயனடைய வாய்ப்பு
தற்போது உள்ள வரம்பில் ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் என்றாலும் அந்த ஆயிரத்துக்கான வரியை செலுத்தியே தீர வேண்டும். ஒரு வேளை உச்ச வரம்பு ரூ. 3 லட்சமாக உயர்ந்தால் ஏராளமானோர் பயனடைய வாய்ப்பாக அமையும் என்பதால் எதிர்பார்ப்பு நிலவியது.

மாத ஊதியதாரர்கள் பாதிப்பு
ஆனால் தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.5 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். இதனால் மாத சம்பளக்காரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டு ஊதியம் ரூ.2.5 லட்சம் இருந்தால் வரி இல்லை. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சமாக இருந்தால் 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. 5 லட்சம் ரூபாய் முதல் ரூ. 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 20 சதவீதம் வரியும், ரூ10 லட்சத்துக்கு மேல் இருந்தால் 30 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது.

நிரந்தர கழிவு தொகை ரூ40 ஆயிரம்
வருமான வரி செலுத்துவோருக்கு நிரந்தர கழிவுத் தொகையாக ரூ. 40 ஆயிரம் அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவினங்களுக்கு இந்த ரூ.40 ஆயிரம் நிரந்தர கழிவு தொகையை பெறலாம் என்றும் பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications