"அது" வேற மாட்டிக்கிச்சு.. ஜோதி மேடம் அசிங்கமா சிக்கிட்டாங்க.. டக்குனு போலீஸ் வேற.. வெலவெலத்த ஆபீசர்
தெலுங்கானா: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. ஹைதராபாத் பெண் அதிகாரி செய்த இந்த காரியத்தை பார்த்து, தெலுங்கானாவே அதிர்ந்து போய் உள்ளது.
சமீபகாலமாகவே, சில பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டு பொதுவெளியில் சிக்கி வருகிறார்கள்.. சமீபத்தில்கூட தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி, சிக்கினார்.

தமிழக - கேரளா எல்லையில் புளியரை செக்போஸ்ட்டில், லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.. அதனால், போலீசாரும் செக்போஸ்ட் அருகிலேயே மப்ட்டியில் மறைந்திருந்து கண்காணித்தனர்..
வாகன ஓட்டிகள்: கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பிரேமா லஞ்சமாக வாங்கிய பணம் அது என்பது உறுதியானது. பிறகு, அவரை கைது செய்து விசாரணையும் நடந்தது.
கைதான பிரேமாவுக்கு 58 வயதாகிறது.. இன்னும் கொஞ்ச நாளில் ரிடையர்மென்ட்.. அதுக்குள்ளேயே இப்படி ஒரு அசிங்கத்தில் சிக்கிவிட்டார். அதற்கு பிறகு, இன்னொரு பெண் அதிகாரி சிக்கினார். வேலூரில் மோட்டார் வாகன ஆய்வாளரான வசந்தி கையும் களவுமாக பணத்துடன் மாட்டிக் கொண்டார்.
தெலுங்கானா: இதற்கு தெலுங்கானாவும் விதிவிலக்கல்ல.. பெண் என்ஜினியர் சிக்கியிருக்கிறார்.. மொத்தம் 84 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கரெக்ட்டாக கையும், களவுமாக சிக்கி உள்ளார். ஹைதராபாத்தில் பழங்குடியினர் நலப்பொறியாளர் அலுவலகத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றுபவர் ஜெகத் ஜோதி.
ஹாஸ்டல் கட்டுவதற்கும், அதற்கான பணிக்கான பில்களை சமர்பிப்பதற்கும் ஒப்பந்ததாரரிடம் அவர் 84 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒப்பந்ததாரர், ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) அதிகாரிகளிடம் புகார் செய்திருக்கிறார்கள்.
அதிகாரிகள்: உடனே, அவர்கள் தந்த ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய 84 ஆயிரம் ரூபாயை, நிர்வாக பொறியாளர் ஜெகத் ஜோதியிடம் வழங்கியிருக்கிறார்கள்.. அந்த லஞ்சப்பணத்தை ஜெகத் ஜோதி வாங்கும்போது கையும், களவுமாக அவரை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துவிட்டனர்..
திடீரென போலீசார் தன்னை ரவுண்ட் செய்ததுமே, அதிர்ச்சி அடைந்தார் ஜோதி.. வசமாக மாட்டிக் கொண்டதை நினைத்து, கதறி கதறி அழுதார்.. இதையடுத்து, ஜோதிக்கு "ஃபீனால்ப்தலீன்" பரிசோதனை செய்யப்பட்டது.,.. இறுதியில் ஜோதி லஞ்சம் வாங்கியதும் உறுதியாகிவிட்டது. அதுமட்டுமல்ல, ஜோதி லஞ்சம் வாங்கியது உறுதியானதுமே, அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, அவரது வீட்டில் இருந்து 4 கிலோ தங்கம், 65 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜோதி: இந்நிலையில், ஏசிபி இயக்குநர் ஜெனரல் சி.வி.ஆனந்த் திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "ஜெகத் ஜோதியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில், அவரது வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் ரொக்கம் மற்றும் 4 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. இது ஒரு பொறியாளரிடம் இருந்து சமீபத்தில் மீட்கப்பட்ட பெரும் தொகையாகும்" என்று தெரிவித்துள்ளார்.
சமீப காலமாகவே சில பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி அசிங்கப்படுவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில், ஏடாகூடமாக சிக்கிவிட்டதை நினைத்து, ஜோதி மேடம், கதறி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications