சந்திரபாபு நாயுடு கைது.. டயர்களை எரித்து தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல்.. கடையடைப்பு!
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆங்காங்கே கடைகளை அடைத்தும் சாலை மறியல் செய்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஏற்கெனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். நந்தியால் பகுதியில் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீஸார் இன்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர்.
ஆனால் சந்திரபாபு வீட்டின் முன் கூடியிருந்த கட்சியினர் போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல் சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் இருக்கிறதால் அவரை அதிகாலை 5.30 மணி வரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாது என எஸ்பிஜி படையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு 3 மணி நேரம் காத்திருந்த போலீஸார் சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர். இதையடுத்து தமிழக ஆந்திர எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் சொந்த ஊர் பேருந்துக்காக காத்திருக்கிறார்கள்.
#WATCH | Telugu Desam Party leaders and activists stage a protest against the arrest of former Andhra Pradesh CM N Chandrababu Naidu at the Annapurna Sarukulu centre in Tirupati. pic.twitter.com/oBc1wmVYnP
— ANI (@ANI) September 9, 2023
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து அவருடைய குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆந்திராவின் குப்பம், சித்தூர் பகுதிகளில் கட்சியினர் மறியல் செய்து வருகிறார்கள். சாலைகளில் டயர்களை கொளுத்தி பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீஸார் 200 பேரை கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். மேலும் தெலுங்கு தேசம் கட்சியினர் அதிகம் இருக்கும் ராஜமுந்திரி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சாலைகளில் டயர்களை எரித்தும் கட்சியினர் போராடி வருகிறார்கள். மேலும் குப்பம் பகுதியில் கடைகளை அடைத்தும் போராட்டங்கள் நடக்கின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications