மோடி'மேஜிக்' கரைகிறது: ஏறி வருகிறது காங்கிரஸ்- இந்தியா டுடே சர்வே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா டுடே - கர்வி இணைந்து நடத்திய Mood of the Nation கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செல்வாக்கு குறைந்து வருவதாகும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இப்போது தேர்தல் நடந்தால் கடந்த முறையை விட 50 இடங்கள் குறைவாகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறும் என்று இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கடந்த முறையை அதிக அளவிலான இடங்களை காங்கிரஸ் கூட்டணி பெறும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

97 தொகுதிகளில்

97 தொகுதிகளில்

நாடு முழுவதும் 97 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 13,576 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலைமை...

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலைமை...

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட இதேபோன்ற கருத்துக் கணிப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 37 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிய வந்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு 24 சதவீதம், மற்றவர்களுக்கு 39 சதவீதம் கிடைத்தது.

பாஜக அப்படியே.. காங்கிரஸ் உயர்வு

பாஜக அப்படியே.. காங்கிரஸ் உயர்வு

தற்போது எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு அதே 37 சதவீத வாக்குகள் அப்படியே உள்ளன. காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து 27 ஆக உயர்ந்துள்ளது. மற்றவர்களுக்கான சதவீதம் 36 சதவீதமாக குறைந்துள்ளது.

யாருக்கு எத்தனை சீட்?

யாருக்கு எத்தனை சீட்?

2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக கூட்டணிக்கு 335 தொகுதிகள் கிடைத்தன. காங்கிரஸ் கூட்டணிக்கு 62 இடங்களே கிடைத்தன. மற்றவர்களுக்கு 146 இடங்கள் கிடைத்தன.

50 சீட் குறையும்

50 சீட் குறையும்

தற்போது எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், இன்று தேர்தல் நடந்தால் பாஜக கூட்டணிக்கு 286 இடங்களே கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது. இது கடந்த முறை வென்றதை விட கிட்டத்தட்ட 50 இடங்கள் குறைவாகும்.

காங்கிரஸுக்கு டபுள்

காங்கிரஸுக்கு டபுள்

அதேசமயம், காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைக்குமாம். அது கடந்த முறை கிடைத்ததை விட கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். மற்றவர்களுக்கு 147 இடங்கள் கிடைக்கும்.

வடக்கில் பாஜகவுக்கு சரிவு

வடக்கில் பாஜகவுக்கு சரிவு

வட இந்தியாவில் பாஜக கூட்டணிக்கு 103 இடங்கள் கிடைக்கலாம் என்கிறது சர்வே. 2015ம் ஆண்டு நடந்த சர்வேயில் இது 134 ஆக இருந்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு 24 இடமும், மற்றவர்களுக்கு 24 இடமும் கிடைக்கலாம்.

தெற்கில்

தெற்கில்

தென்னிந்தியாவில் பாஜக கூட்டணிக்கு 43 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 28 இடங்களும் கிடைக்கலாம். மற்றவர்களுக்கு 63 இடம் கிடைக்கலாம்.

கிழக்கு இந்தியா

கிழக்கு இந்தியா

கிழக்கு மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைக்கலாம். காங்கிரஸ் கூட்டணிக்கு 29, மற்றவர்களுக்கு 60 இடங்கள் கிடைக்கலாம்.

மேற்கிலும் பாஜகவுக்கு சரிவு

மேற்கிலும் பாஜகவுக்கு சரிவு

இந்தியாவின் மேற்குப் பகுதியில் அதாவது குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் 87 இடங்களை பாஜக கூட்டணி பெறும் என்கிறது சர்வே. 2015 சர்வேயில் இது 107 ஆக இருந்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு 29 இடம் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஒரு இடமும் கிடைக்க வாய்ப்பில்லை.

மோடி செல்வாக்கு குறைகிறது

மோடி செல்வாக்கு குறைகிறது

இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் மோடியின் தாக்கம் நாட்டு மக்கள் மத்தியில் சரிந்து வருவதையே காட்டுவதாக உள்ளது. அதேசமயம், ராகுல் காந்தி மீது மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதையும் இது சுட்டிக் காட்டுகிறது.

சகிப்புத்தன்மை இன்மை அதிகரிப்பு

சகிப்புத்தன்மை இன்மை அதிகரிப்பு

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 40 சதவீதம் பேர் சகிப்புத்தன்மை இன்மை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். அப்படியே உள்ளதாக 22 சதவீதம் பேரும், இல்லை என 31 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

மோடி அரசு பெஸ்ட்

மோடி அரசு பெஸ்ட்

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலாவர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை விட மோடி அரசு சிறந்தது என்று கூறியுள்ளனர்.

சிறந்த பிரதமர்

சிறந்த பிரதமர்

யார் பிரதமர் பதவிக்கு சிறந்தவர் என்ற கேள்விக்கு நரேந்திர மோடியே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

விலைவாசி உயர்வே முக்கியப் பிரச்சினை

விலைவாசி உயர்வே முக்கியப் பிரச்சினை

நாட்டின் முக்கியப் பிரச்சினை என்று விலைவாசி உயர்வுக்கு 34 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஊழலுக்கும் 34 சதவீதம் பேர் முக்கியப் பிரச்சினையாக கூறியுள்ளனர். தீவிரவாதத்தை 7 சதவீதம் பேரும், பெண்கள் பாதுகாப்பை 6 சதவீதம் பேரும் முக்கியப் பிரச்சினையாக கூறியுள்ளனர்.

ஏழைகள் மீது பாஜகவுக்கே அக்கறை

ஏழைகள் மீது பாஜகவுக்கே அக்கறை

ஏழைகள் மீது அக்கறை உள்ள அரசு என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 44 சதவீதம் பேரும், காங்கிரஸ் என்று 25 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். ஆம் ஆத்மிக்கு 5 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சியை யார் சிறப்பாக வைத்திருந்தனர் என்ற கேள்விக்கு பாஜக அரசு என்று 47 சதவீதம் பேர் கூறியுள்ளனர். காங்கிரஸ் அரசுக்கான ஆதரவு 26 சதவீதம்தான். கடந்த ஆட்சியை விட மோசம் என்றவர்கள் 15 சதவீதம் பேர்.

ஊழல்

ஊழல்

ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு ஆம் என்று 32 சதவீதம் பேரும், இல்லை என்று 28 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். அப்படியேதான் உள்ளது என்று 31 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

பணவீக்கம்

பணவீக்கம்

பணவீக்கம் கட்டுப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு ஆம் என்று 34 சதவீதம் பேரும் அப்படியே உள்ளதாக 20 சதவீதம் பேரும், இல்லை என்று 38 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

மோடி கருப்புப் பணம்

மோடி கருப்புப் பணம்

மோடி கருப்புப் பணத்தை கொண்டு வருவாரா என்ற கேள்விக்கு அது போலியான வாக்குறுதி என்று 53 சதவீதம் பேர் கூறியுள்னர். கொண்டு வருவார் என்று 33 சதவீதம் பேரும், கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று 14 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அச்சே தின் (நல்ல நாட்கள்)

அச்சே தின் (நல்ல நாட்கள்)

அச்சே தின் குறித்து 40 சதவீதம் பேர் மோடி அதைக் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளனர். 31 சதவீதம் பேர் அப்படியெல்லாம் எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். 22 சதவீதம் பேர் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இப்போது தேர்தல் நடந்தாலும் பாஜக கூட்டணி தான் அதிக இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்கும். அதே நேரத்தில் கடந்த முறையை விட 50 இடங்கள் குறையும் என்கிறது சர்வே. Prime Minister Narendra Modi has emerged as best prime ministerial

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+