அன்று மட்டும் 3,165 டிக்கெட்டுகள்.. கலங்கடித்த 'மோர்பி' பால விபத்து.. தடயவியல்துறை ஷாக் ரிப்போர்ட்!
காந்திநகர்: மோர்பி பாலம் விபத்து நடைபெற்ற அன்று விற்பனைக்காக 'ஒரேவா' குழுமம் 3,165 டிக்கெட்டுகளை வழங்கி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் 140க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் குஜராத் உயர்நீதிமன்றம் இந்த சம்பவம் குறித்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேற்குறிப்பிட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த படகுகளும் ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

3,165 டிக்கெட்டுகள்
குஜராத் மாநிலத்தின் மோர்பி பகுதியில் இருந்த நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 140க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்து குறித்து மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், தடயவியல் துறை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், "விபத்து நடந்த அன்று விற்பனைக்காக 'ஒரேவா' குழுமம் சார்பில் 3,165 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதில் அத்தனை டிக்கெட்டுகளும் விற்பனையாகவில்லை.

ஒப்பந்த ஊழியர்கள்
மேலும், பாலத்தில் பாதுகாப்புக்காக நிற்க வைக்கப்பட்டிருந்த ஆட்கள் 'ஒப்பந்த ஊழியர்கள்'. இவர்களிடம் பாலத்தில் ஒரே நேரத்தில் எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும்? ஒரு வேளை விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் எவ்வித முன் அனுபவமும் கிடையாது. எனவே இவர்களை மட்டும் கைது செய்தது பொருத்தமற்றது. பாலத்தை புனரமைக்க 12 மாதங்கள் அவகாசம் எடுத்திருக்க வேண்டும் ஆனால் 7 மாதங்களிலே பணி முடிவடைந்ததாக கூறப்பட்டு பாலம் திறக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது, பாலம் திறக்கப்படுவதற்கு முன்னர் பரிசோதிக்கப்படவில்லை.

துருப்பிடித்த போல்ட்
குறிப்பாக பாலத்தில் விபத்து ஏற்பட்டால் மக்களை மீட்க எவ்வித படகுகளும் ஆற்றில் நிற்கவைக்கப்படவில்லை. பாலத்தின் கேபிள்கள் துருப்பிடித்துள்ளன, கேபிள் போல்டுகளும் துருப்பிடித்துள்ளன. இந்நிலையில் நடப்பதற்காக அமைக்கப்பட்ட தளம் மட்டும் அதிக எடையுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது" என்று அறிக்கை விரிவாக கூறியிருக்கிறது. இந்த அறிக்கையை சுட்டிக்காட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஒரேவா நிறுவனத்தின் உயர்மட்ட ஊழியர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதை மீண்டும் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.

சிபிஐ விசாரணை
குஜராத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பிரச்னை தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், நிவாரணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநில நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் வழிகாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications