Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

The GOAT: இந்தியா வந்தார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி.. ஒன்றாக போட்டோ எடுக்க ரூ.10 லட்சமாம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக நள்ளிரவில் இந்தியா வந்தார். அவரை விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில் தான் மெஸ்ஸி உடன் சேர்ந்து போட்டோ எடுக்க ரூ.9.05 லட்சம் +ஜிஎஸ்டி என்று மொத்தம் ரூ.10 லட்சம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கால்பந்து ஜாம்பவனாக இருக்கிறார் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளன. கடந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அணி தான் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது.

lionel messi kolkata football

அடுத்த ஆண்டு ஜூன் 11ல் மீண்டும் உலககோப்பை கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் 3 நாள் சுற்றுப்பயணமாக லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. THE GOAT India Tour 2025 என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

திட்டமிடப்பட்டபடி லியோனல் மெஸ்ஸி வந்தார். அமெரிக்காவின் மியாமியில் இருந்து துபாய் வழியாக இந்தியாவுக்கு நள்ளிரவில் மெஸ்ஸி வந்தார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மெஸ்ஸியின் ரசிகர்கள் அவரது அர்ஜென்டினா நாட்டின் கொடியை அசைத்து உற்சாகமாக வரவேற்றனர்.

இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தேர்வு செய்யப்பட்ட நபர்களுடன் மெஸ்ஸி சந்திப்பை நடத்துகிறார். கொல்கத்தாவில் உள்ள யுவ பாரதி மைதானத்துக்கு செல்கிறார். அங்கு, அவரை முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ஷாரூக் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஆகியோர் வரவேற்கின்றனர். பிறகு ஆன்லைனில் மெஸ்ஸி தனது சிலையை திறந்து வைக்க உள்ளார். உலககோப்பை வென்ற மெஸ்ஸி மீது கொல்கத்தா ரசிகர்கள் கொண்டுள்ள பாசத்தை காட்டும் வகையில் இந்த நிகழ்வு அமைய உள்ளது. பிறகு நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்கிறார். அங்குள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நட்பு ரீதியலான கால்பந்து போட்டியில் விளையாடுகிறார். இதில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் பங்கேற்க உள்ளார். பிறகு இசை கச்சேரி நடக்கிறது. நாளை மும்பை செல்லும் மெஸ்ஸி இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தொடர்ந்து, பிரபலங்களுடன் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அவர், வான்கடே மைதானத்தில் நடக்கும் பேஷன் ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். பிறகு டிசம்பர் 15ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசும் மெஸ்ஸி அருண் ஜெட்லி மைதானத்தில் மினெர்வா அகாடமி வீரர்களைப் பாராட்டுதல் உட்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மெஸ்ஸி பங்கேற்கும் கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகள் மாவட்ட செயலியில் விற்பனை செய்யப்படுகிறது.
ஹைதராபாத்தில் மெஸ்ஸியுடன் ரசிகர்கள் ஒரு புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை நிகழ்ச்சி ஏற்பாடுக்குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி உறுதி செய்துள்ளார். ரூ.9.95 லட்சம் போட்டோ கட்டணமாகவும், தனியாக ஜிஎ்டியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த கட்டண நிர்ணயத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வளவு தொகை எடுப்பதற்கு பதில் ஏஐ பயன்படுத்தி செலவின்றி மெஸ்ஸியுடன் போட்டோ எடுத்து கொள்ளலாம் என்று பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+