For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கான வயது வரம்பில் மாற்றமில்லை: மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வயது வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பில் மத்திய அரசு மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய ஆரணி தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் வி.ஏழுமலை, ‘ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்கும் பின்தங்கிய வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பை குறைப்பதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறதா என்றார்.

The government had no plans to reduce or alter the existing age limit…

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய பணியாளர் நலன் அமைச்சர் ஜிதேந்திர சிங்,

"இந்த கேள்வி பல நாட்களாக சிலருடைய மனதில் இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சில ஊடகங்களில் இது போன்ற செய்திகள் வெளிவந்ததால் தான் மக்களிடையே இந்த கேள்விகள் எழுந்துள்ளன.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்க பொது வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 32 ஆகும். இவர்கள் 6 முறை தேர்வு எழுதலாம். இதைப்போல ஓ.பி.சி. பிரிவினருக்கு உச்சகட்ட வயது வரம்பு 35. இவர்கள் 9 முறை தேர்வு எழுதலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 37 ஆகும். இவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

எனவே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் பொது வகுப்பினர், ஓ.பி.சி., ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பில் மத்திய அரசு எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Responding to a query during question hour in Lok Sabha on Wednesday, Singh also made it clear that the government had no plans to reduce or alter the existing age limit for appearing in civil service examination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X