ஷாக் சம்பவம்! 11 வயது சிறுமியை சீரழித்த ஆறு பேர்! எல்லோருமே 15 வயசுக்குள்ள! அதிர்ந்து போன போலீசார்!

Subscribe to Oneindia Tamil

ரஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை 15 வயதுக்கு உட்பட்ட ஆறு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ராஜாஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மைனர் சிறுமிகளுக்கு வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றனர்.

ஜார்கண்டில் அதிர்ச்சி

ஜார்கண்டில் அதிர்ச்சி

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11 வயது சிறுமி ஒருவர் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து 10 முதல் 15 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

குந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த செவ்வாய்கிழமை அப்பகுதியில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அருகிலுள்ள கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு நடன நிகழ்ச்சியின் போது, நடனமாடிய அவருடன் அங்கிருந்த சிறுவர்களுடன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

இந்நிலையில் திருமண நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவில் சிறுமி தனது தோழிகள் இருவருடன் வீடு திரும்பியபோது, ​​பின்னால் நடந்து வந்த அந்த 6 சிறுவர்கள் சிறுமியை தடுத்து நிறுத்தி தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அந்த இடத்திலிருந்து தப்பிய சிறுமியுடைய இரண்டு தோழிகள் இதுகுறித்து அவரது பெற்றோருக்குத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் அங்கு சென்ற நிலையில் சிறுவர்கள் அவர்களைப் பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.

சிறுவர்கள் கைது

சிறுவர்கள் கைது

இதனையடுத்து நடந்ததைக் கேள்விப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், இச்சம்பபம் வெளியே தெரிந்தால் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படும் என கருதியதன் காரணமாக முதலில் காவல்துறையில் புகார் அளிக்கத் தயங்கியதாகக் கூறப்படுகிறது. இறுதியாக, வியாழக்கிழமை சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் குற்றம் சாட்டப்பட்ட 6 சிறுவர்களை பிடித்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+