அசத்தல் ஆதித்யா எல் 1.. புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.. இஸ்ரோ தலைவர் சோம்நாத் மகிழ்ச்சி
ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. பி.எஸ்.எல்.வி சி. 57 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக தனியாக பிரிந்து புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து கொண்டு திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. 11.50 மணிக்கு ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட்டில் இருந்து சரியாக ஒரு மணி நேரத்தில் ஆதித்யா எல். 1 விண்கலம் தனியாக பிரிந்தது. இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பூமியில் இருந்து சரியாக 648 கிலோ மீட்டர் உயரத்தில் ஆதித்யா விண்கலம் பிரிந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஆதித்யா விண்கலம் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். அடுத்தடுத்த சுற்றுகளைக் கடந்த மிக நீண்ட பயணத்திற்குப் பிறகு எல். 1 புள்ளியை அடையும் என்றும் சோம்நாத் கூறினார்.
பூமியில் இருந்து 15 கோடி கிமீ., தூரத் தொலைவில் சூரியன் இருக்கிறது. விண்ணில் பயணத்தை தொடங்கியுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் "லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்" என்ற இடத்தில் நிலைநிறுத்தப்படும். புவியின் நீள்சுற்றுவட்டப் பாதையில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்ற பகுதிக்கு செலுத்தப்பட்டு அங்கிருந்து சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும். இன்று விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் 125 நாட்கள் பயணித்து அதாவது சுமார் 4 மாதங்கள் பயணித்து எல் 1 புள்ளியை சென்றடையும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications