For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முத்த போராட்ட பரபரப்பு பழசு.. சானிட்டரி நாப்கின் அனுப்பும் போராட்டம்தான் கேரளாவில் புதுசு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 40 பெண் ஊழியர்களை ஆடை அவிழ்த்து சோதனை நடத்திய நிர்வாகத்திற்கு எதிராக 'நாப்கின்' அனுப்பும் போராட்டத்தை பேஸ்புக் மூலம் தொடங்கியுள்ளனர்.

கொச்சியிலுள்ள அஸ்மா ரப்பர் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தில், டிசம்பர் 10ம்தேதி ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றது. அந்த நிறுவனத்தின் கழிவறையில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினை யாரோ ஒரு பெண் போட்டுள்ளார். கழிவறையில் அதை வீசக்கூடாது என்பது அலுவலக விதிமுறையாகும்.

நிர்வாண சோதனை

நிர்வாண சோதனை

விதிமுறையை மீறி நாப்கினை போட்ட பெண்ணை கண்டுபிடிப்பதற்காக, அங்கு பணியாற்றிய 40 பெண்களையும், ஆடையை அவிழ்த்து யாருக்கு மாதவிடாய் வருகிறது என்பதை சோதித்து பார்த்துள்ளனர் அங்குள்ள 2 பெண் சூப்பர்வைசர்கள்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

இந்த சம்பவம் சிறிது நாட்களுக்கு பிறகு மீடியாக்களில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ம்தேதி அலுவலக சூப்பர் வைசர்களுக்கு எதிராக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து, கேரள பெண்கள் கமிஷனும் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.

பேஸ்புக் பக்கம் திறப்பு

பேஸ்புக் பக்கம் திறப்பு

இதனிடையே பேஸ்புக்கில், குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிராக "Red Alert: You've Got a Napkin!"என்ற பெயரில் பிரச்சாரம் தொடங்கியுள்ளது. இந்த பேஸ்புக் பக்கத்தை திருவனந்தபுரத்தை சேர்ந்த மாயா லீலா என்ற இளம் பெண் முன்னெடுத்துள்ளார். இவர், தற்போது ஸ்பெயினில் பிஹெச்டி படித்து வருகிறாராம். மேலும், ஏற்கனவே கேரளாவை கலக்கிய, முத்த போராட்டம் குறித்த கோஷத்தை முன்வைக்க பேஸ்புக்கை பயன்படுத்தியதும், இதே குழுதான் என்று கூறப்படுகிறது.

நாப்கின் அனுப்ப கோரிக்கை

நாப்கின் அனுப்ப கோரிக்கை

இந்த நாப்கின் போராட்ட பேஸ்புக் பக்கத்தில் கொச்சியிலுள்ள குறிப்பிட்ட நிறுவனத்தின் முகவரி தரப்பட்டுள்ளது. அந்த முகவரிக்கு பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நாப்கின்களை அனுப்பலாம். பயன்படுத்தியதையோ அல்லது பயன்படுத்தாதையோ என எதை வேண்டுமானாலும் நிறுவன மேலாளருக்கு அனுப்ப வேண்டும் என்பது இந்த கோஷத்தின் கோரிக்கை. ஏற்கனவே சிலர் நாப்கின்களை அனுப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்த போராட்டம்

முத்த போராட்டம்

பொது இடத்தில் நடத்தப்பட்ட முத்த போராட்டம் ஓய்ந்து தற்போது நாப்கின் போராட்டம் கேரளாவில் புயலை கிளப்பி வருகிறது.

English summary
After sparking off a series of public smooching protests across India in November 2014, the original Kiss Of Love campaigners are back with a new cause – fighting discrimination against menstruating women in Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X