Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புருஷன் இறந்தால் மறுமணம் பண்ணுவியா? 21 வயது பெண்ணின் ஆடையை கிழித்து.. குஜராத்தில் கொடூர தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கணவனை இழந்த 21 வயது இளம்பெண் ஒருவர் மறுமணம் செய்ய முயன்றதற்காக உறவினர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் 21 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் அவரது கணவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் இளம்பெண்ணை வெகுவாக பாதித்துள்ளது. இதனையடுத்து கணவன் இறந்த சில மாதங்கள் கழித்து அப்பெண் மற்றொரு திருமணத்திற்கு தயாராகியுள்ளார்.

மறுமணம்

மறுமணம்

ஆனால் இதற்கு முதல் கணவர் வீட்டிலிருந்து கடும் எதிர்ப்புகள் தலைதூக்கி இருந்துள்ளன. ஆனால் அப்பெண் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். எதிர் பார்த்ததைப்போல மாப்பிள்ளை கிடைத்திருக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கு தேவையான வேலைகளில் இளம்பெண் இறங்கியுள்ளார். இதனை சற்றும் ஏற்றுக்கொள்ளாத முதல் கணவரின் குடும்பத்தினர் இளம்பெண்ணை வீடு தேடி வந்து மிரட்டி சென்றுள்ளனர். ஆனால் அப்போதும் அப்பெண் இவர்களின் அச்சுறுத்தல்களுக்கு இணங்கவில்லை. எனவே ஆத்திரமடைந்த குடும்பத்தினர் நேற்று இப்பெண் மீது கடும் தாக்குதலை தொடுத்திருக்கின்றனர்.

தாக்குதல்

தாக்குதல்

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் இளம்பெண்ணை மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கியுள்ளனர். வீட்டின் தூணில் இளம்பெண்ணை முதல் கணவனின் சகோதரிகள் இறுக்கி பிடித்துக்கொள்ள ஒரு ஆண் கம்பை கொண்டு அடித்துள்ளார். வீட்டிற்கு வெளியில் நடக்கும் இந்த வன்முறையை கிராம மக்கள் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பின்னர் இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து தரையில் அவளது தலையை ஒரு ஆண் இடிக்கிறார். அவளது ஆடைகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. தலை முடியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டியுள்ளனர்.

கைது

கைது

இந்த தாக்குதலின்போது கிராம மக்கள் முதல் கணவனின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "இளம்பெண்ணின் முடியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டியுள்ளார்கள். கொடூரமான முறையில் அவள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது தற்போது வரை தெரியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளனர்.

தீண்டாமை

தீண்டாமை

இந்த சம்பவத்திற்கு மகளிர் அமைப்புகள் கண்டம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பாஜக அரசின் கடமை என்றும் கூறியுள்ளனர். குஜராத்தில் மத நம்பிக்கைகள் அதிகம் பின்பற்றப்படுவதால் நகரங்களை தவிர்த்து கிராமங்களில், மறுமணம் எதிர்ப்பு, தீண்டாமை, சாதிய பாகுபாடுகள் ஆகியவை கறாராக பின்பற்றப்படுவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+