இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்? டெல்லியில் பதட்டம் !
டெல்லி: இண்டிகோ விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள இண்டிகோ விமானத்தின் அழைப்பு மையத்தை தொடர்பு கொண்ட ஒருவர், 11 இண்டிகோ விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். விமானங்களின் எண்கள் குறிப்பிடவில்லை என்றாலும், டெல்லியில் வந்து இறங்கும் அனைத்து இண்டிகோ விமானங்களும் சோதனையிடப்பட்டு வருகிறது.

இதையடுத்து டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானம் (6E853), தனியான ஒரு பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, உலக முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை விமான நிலையத்திற்கு பார்வையாளர்கள் நாளை வரை நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வந்த அழைப்பில் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து 5 விமானங்களில் கடுமையான சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் அது வெறும் புரளி எனத் தெரியவந்தது.
இந்நிலையில் ஒரு விமானத்தை ஒரு மணி நேரம் சோதனையிட ரூ. 7 லட்சம் செலவு ஆகும். ஒரு விமானத்தை சோதனையிட குறைந்தது 5 மணி நேரம் ஆகும். இன்றைய நிலவரத்தின்படி இண்டிகோ நிறுவனத்திற்கு இந்த சோதனையால் ரூ. 2.5 கோடியில் இருந்து ரூ. 3 கோடி வரை செலவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications