திருப்பதி ஏழுமையான் கோயிலில் பெண் குழந்தை கடத்தல்... அதிர்ச்சி வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகேயுள்ள தேநீர்க் கடையில் விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகில் தேநீர் கடையில் வேலை பார்த்து வருபவர் சுரேஷ். இவரைப் பார்ப்பதற்காக அவருடைய மனைவியும் 7 வயது பெண் குழந்தையும் வந்துள்ளார்கள். அப்போது அக்குழந்தை அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது காணமல் போய்விட்டது.

Child Kidnapped in Tirupati-Oneindia Tamil
Tirupati venketeswara temple a child was abducted by a woman

அதையடுத்து, திருப்பதி காவல்நிலையத்தில் சுரேஷ் புகார் கொடுத்தார். அப்போது போலீசார் கோயில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அதில் ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அப்பெண் குழந்தையிடம் பேசிக்கொண்டே நீண்ட தூரம் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும், போலீசார் அப்பெண்ணைத் தேடி வருகின்றனர்.

கடந்த மாதம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு குடும்பம் உறங்கிக்கொண்டிருந்த போது ஒரு வயது குழந்தை கடத்திச் செல்லப்பட்டது. ஆனால், போலீசார் அக்குழந்தையை ஓரிரு நாட்களில் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Tirupati venketeswara temple a child was abducted by a woman and police searching her
Please Wait while comments are loading...