சேலத்தில் மதரீதியாக பேசி வாக்கு கேட்டதாக சர்ச்சை.. பிரதமர் மோடி மீது தேர்தல் கமிஷனில் மம்தா புகார்
கொல்கத்தா: சமீபத்தில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. பிரதமரின் பேச்சு மதம் சார்ந்து இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. எனவே தேர்தல் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார். கடந்த 30 நாட்களில் 6 முறைக்கு மேல் அவர் தமிழகம் வந்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது பல்வேறு விமர்சனங்களை கிளப்பி வருகிறது. குறிப்பாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பிரதமர் மதம் குறித்து பேசி ஓட்டு கேட்டிருந்ததாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
சேலத்தில் பிரதமர் பேசியதாவது: "இந்து மதத்தினர் நம்பிக்கை வைத்துவழிபட்டு வரும் சக்தியை அழிக்க வேண்டும்'' என்கின்றனர். தமிழக மக்கள் ஓம் சக்தியாக, மகா மாரியம்மனை வழிபடுகின்றனர். தமிழகத்தில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, கன்னியாகுமரி அம்மன், சமயபுரம் மாரியம்மன் என சக்தி ஆலயங்கள் உள்ளன. சக்தியை பெண் உருவில் நாம் வணங்குகிறோம். இத்தகு சக்தியை வீழ்த்துவோம் என்று கூறுவதை அனுமதிக்க முடியாது. இந்து தர்மத்தின் வழிபாடான சக்தியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள்" என்று பேசியிருந்தார்.
முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, தேர்தல் பிரசாரங்கள் குறித்தும் தலைமை தேர்தல் ஆணையர் தெளிவாக விளக்கியிருந்தார். அதன்படி, மதத்தின் பெயரில் வாக்குகள் சேகரிக்க கூடாது என்று கூறியிருந்தார். ஆனால் பிரதமர் மதம் குறித்து பேசியிருக்கிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்திருக்கிறது.
இந்த புகாரில், "சேலத்தில் மோடி பேசியது மேற்கு வங்கம் உட்பல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒளிபரப்பாகியது. அதில். 'இந்தியா கூட்டணி மீண்டும் மீண்டும் இந்து மதத்தை அவமதிக்கிறது. அவர்கள் இந்து மதத்திற்கு எதிரான எண்ணங்களை விதைக்கிறார்கள். பிற மதங்களுக்கு எதிராக பேசுவதில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு நொடி கூட வீணடிக்காமல் இந்து மதத்தை அவமதிக்கிறார்கள். இதை எப்படி பொறுத்துக் கொள்வது? இதை எப்படி அனுமதிப்பது?' என்று பேசியிருந்தார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 123 (3)ன் கீழ், மதத்தின் அடிப்படையில் தேர்தல்களின் போது வாக்குகளைக் சேகரிப்பது ஒரு 'ஊழல் நடைமுறை' என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே நரேந்திர மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications