ஜல்லிக்கட்டு சட்டம்: ரத்து செய்யக் கோரி பீட்டா, விலங்குகள் நல வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் மனு!
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இம்மனுக்கள் மீது திங்களன்று விசாரணை நடைபெற உள்ளது.
டெல்லி: தமிழக அரசு நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு சட்டத்தை ரத்து செய்யக் கோரி பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளன.
தமிழகத்தின் பண்பாட்டு அடையாளம் ஜல்லிக்கட்டு. இந்த அடையாளத்தை அழிப்பதற்காக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றன.

கடந்த 2 ஆண்டுகாலமாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வைத்தது பீட்டா. ஆனால் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்து வீதிக்கு வந்து போராடியது.
பல லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் வரலாறு காணாத யுக புரட்சியை நடத்தினர். இதன் விளைவாக தமிழக அரசு முதலில் அவசர சட்டம் கொண்டு வந்தது. பின்னர் நிரந்த சட்டத்துக்காக தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
தற்போது தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் திங்கள்கிழமையன்று விசாரிக்க உள்ளது.
பீட்டாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வியும் விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த அரிமா சுந்தரமும் ஆஜராக உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications