இணையம் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க செயல்பாடுகள்... கண்காணிக்க சிறப்பு குழுவை அமைக்கும் கேரளா
திருவனந்தபுரம்: இணையம் மூலமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க சிறப்பு குழுவை அமைக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தொடர்பான பிரசுரங்கள், வீடியோ காட்சிகள் அதிகம் பகிர்ந்து கொள்ளப்படும் மாநிலம் என்பதால் ஒரு சிறப்பு குழுவை அமைக்க கேரளா அரசு முடிவு செய்திருப்பதாக நமது ஒன் இந்தியாவுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த குழுவில் இடம்பெறும் அதிகாரிகள் இணையம் மூலமான ஜிகாதிகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும். கடந்த ஓராண்டு காலமாக கேரளா இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்காக ஒரு குழு தேவை என கருதி வந்தது கேரளா போலீஸ். அண்மையில் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த பல இளைஞர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
இந்த சந்தேக நபர்களை மிக உன்னிப்பாக தற்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு கண்காணிக்க உள்ளது. மேலும் வாட்ஸ் அப்பிலும் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு குழு ஒன்று இயங்கி வருவதையும் கேரளா போலீசார் அண்மையில் கண்டுபிடித்தனர். அதுவும் அந்த குழுவில் உள்ள ஒரு நபரே தகவலை தெரிவித்ததன் அடிப்படையில் இதுவும் அம்பலமானது.
தற்போது கேரளா அரசு அமைத்துள்ள சிறப்புக் குழுவானது உளவுத் துறையின் ஒரு பகுதியாக இருக்கும். உளவுத்துறையும் இதுபோன்ற கண்காணிப்புகளை மேற்கொண்டாலும் சிறப்புக் குழு ஜிகாதிகள் தொடர்பான விவகாரங்களை மட்டும் கண்காணிக்கும்.
அதேபோல் கேரளாவில் கடந்த சில மாதங்களாக காணாமல் போன இளைஞர்களை தேடும் பணியையும் இக்குழு மேற்கொள்ளும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications