காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தீவிரவாதி சுட்டு கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

காஷ்மீரின் நகல்கம் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று மாலை தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

Top Lashkar terrorist Abu Ismail, aide killed in encounter in Kashmir

இங்கு பதுங்கி இருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதில் லஷ்கர்இதொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த அபு இஸ்மாயில் என்ற தீவிரவாதி சமீபத்தில் அமர்நாத் யாத்ரீகர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது.

கடந்த ஓராண்டில் காஷ்மீரில் கொல்லப்பட்ட நான்காவது முக்கியமான தீவிரவாதி அபு இஸ்மாயிலாகும். முன்னதாக, புர்கான் வானி, சப்சர் பட் மற்றும் அபு துஜானா ஆகிய முக்கிய புள்ளிகள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Abu Ismail, a top Lashkar-e-Taiba terrorist operating in Kashmir and "architect of Amarnath Yatra attack", was killed on Thursday in an encounter with security forces.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற