Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிமாச்சலில் குவியும் பயணிகள்...கொரோனா அலை ஓயவில்லை விதிமுறைகளை பின்பற்றுங்கள் - முதல்வர் வேண்டுகோள்

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்து வருவதால் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சிம்லா: கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். கொரோனா அலை ஓயவில்லை என்பதால் பயணிகள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tourists flock to Himachal Chief Minister says that corona wave is not over

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மலைவாசஸ்தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் பலரும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால் கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், சுற்றுலா பயணிகள் வரவேற்கப்படுகிறார்கள் என்றாலும் மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறித்து கவலைப்படுவதாக கூறினார்.

சுற்றுலாத்துறையை பாதுகாக்க வேண்டும் அதே நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. கோவிட் 19 அலை ஓயவில்லை எனவே கூட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளேன்.

பல மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதால் சுற்றுலா பயணிகள் மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ளால் சுற்றுலா பயணிகள் ஹரித்துவார் உள்ளிட்ட பகுதிகளுக்கும், சிம்லா, மணாலி போன்ற தலங்களுக்கும் வரத் தொடங்கியுள்ளனர்.

கொரோனா விதிமுறைகளை மீறி ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தோம் தற்போதுதான் விடுதலை பெற்றுள்ளது போல உணர்கிறோம் என்று சுற்றலா பயணிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா மூன்றாவது அலைக்கு முன்பு சுற்றி பார்த்து விட வேண்டும் என்று வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார் ஹரித்வார் நகர காவல்துறை அதிகாரி அபய் சிங்.

ஹோட்டல் மற்றும் வன்ஷாலா தொழிற்சங்கங்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம். எல்லோரும் ஹர் கி பவுரியைப் பார்க்க விரும்புகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குப் பிறகு, மீதமுள்ள பயணிகளை காட்டிற்கு செல்ல வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் திரு சிங் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வரும் பயணிகள் கொரோனா விதிமுறைகளை அவசியம் பின்பற்றுங்கள் என்று ஹிமாச்சல் பிரதேச அரசு வேண்டுகோள் வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+