For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ஜின் கோளாறு: குகை பாதையில் கும் இருட்டில் நின்றுபோன கத்ரா ஏ.சி. ரயில்- பயணிகள் தவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

காஷ்மீர்: டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ராவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரயில் என்ஜின் கோளாறு காரணமாக குகை பாதையில் செல்கையில் நின்றுவிட்டது.

Train to Katra stuck in tunnel due to engine failure

டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் இருக்கும் கத்ராவுக்கு ரயில் விடப்படும் என்று மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஸ்ரீ சக்தி எக்ஸ்பிரஸ் என்ற ஏசி ரயில் டெல்லியில் இருந்து கத்ராவுக்கு செவ்வாய்க்கிழமை முதன்முறையாக இயக்கப்பட்டது. இந்த ரயில் இன்று இரண்டாவது முறையாக டெல்லியில் இருந்து கத்ராவுக்கு கிளம்பியது.

ரயில் கத்ரா ரயில் நிலையத்தை அடைய 5 கிமீ தூரம் இருக்கும்போது என்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரயில் குகை பாதையில் நின்றுவிட்டது. சுமார் 1 மணிநேரம் வரை ரயில் குகை பாதையில் நின்றது.

கத்ராவில் புதிதாக ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் உத்தம்பூரில் இருந்து என்ஜின் கொண்டு வரப்பட்டு ஸ்ரீ சக்தி எக்ஸ்பிரஸில் பொருத்தப்பட்டது. அதன் பிறகே ரயில் கிளம்பிச் சென்றது.

ஏற்கனவே 35 நிமிடங்கள் தாமதமாக கிளம்பிய ரயில் என்ஜின் கோளாறால் மேலும் ஒரு மணிநேரம் தாமதமாக கத்ராவை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The newly introduced direct train to Katra, the base camp of Shri Mata Vaishno Devi Shrine in Jammu and Kashmir, was stuck in a tunnel for an hour this morning due to engine failure near Katra Railway Station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X